ஊத்துமலை அருகே மின்வேலியில் சிக்கி மான் பலி-தோட்ட உரிமையாளர் கைது
1 min read
Deer dies after getting caught in electric fence near Uthumalai – plantation owner arrested
22/3/2026
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஊத்துமலை அருகே மின் வேலியில் சிக்கி மான் உயிரிழந்த நிலையில் உரிய அனுமதியின்றி மின்வேலி அமைத்த விவசாயியை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலங்குளம் அருகே உள்ள
தங்கம்மாள்புரம் மேலத் தெருவை சேர்ந்த பரமசிவன் என்பவரது மனைவி மணித்தாய் (வயது 55) விவசாயம் செய்து வருகிறார்.இவரது கணவர் கேரளாவில் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஊத்துமலை அருகே சீவலசமுத்திரத்தில் சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது.
அதில் விவசாயம் செய்து வரும் பணித்தார் . விவசாய பயிர்களை பாதுகாப்பதற்காக இவர் சட்ட விரோதமாக மின்வெலி அமைக்கப்பட்டதாக அந்த கூறப்படுகிறது. மின்வேலியில் நேற்று முன்தினம் மான் ஒன்று சிக்கி உயிரிழந்துள்ளது.
இதைப்பார்த்த பணித்தார்
இறந்த மானை யாருக்கும் தெரியாமல் தோட்டத்தில் புதைத்ததாகவும் கூறப்ப டுகிறது. இது குறித்து ஆலங்குளம் வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன் குற்ற செய லில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதன்படி ஆலங்குளம் வனச்சரகர் முனிரத்தினம் தலைமையில் வனவர் சதீஷ் குமார் ஆகியோர் விரைந்து சென்று தோட்டத்தில் புதைக்கப்பட்ட மானை தோண்டி எடுத்தனர். அதனைத் தொடர்ந்து தோட்டத்தின்
உரிமையாளர் மணித்தாயை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.