June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லை: தந்தையை கொன்றவரை கைது செய்யாததால் மகள் தற்கொலை

1 min read

Nellai: Daughter commits suicide because father’s killer was not arrested

22/3/2026
நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி அருகே உள்ள நெல்லையாபுரத்தில் கடந்த 17-ந் தேதி முதியவர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் குற்றவாளியை இதுவரை கைது செய்யாததால் விரக்தி அடைந்த அவரது மகள் தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே வடக்கு நெல்லையாபுரத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம், கடந்த 17-ல் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் குற்றவாளிகளை உடனே கைது செய்யாததைக் கண்டித்து, அவரது மகள் பேபி கனி, தந்தை இறந்த அதிர்ச்சியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சம்பவத்தின் முக்கிய விவரங்கள் வருமாறு:-

மூலைக்கரைப்பட்டியை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் மார்ச் 17 அன்று அவரது நிலத்திற்கு அருகில் வெட்டிக் கொல்லப்பட்டார்,
கொலையாளிகளை உடனே கைது செய்யக்கோரி, உறவினர்கள் உடல் உடற்கூராய்வு செய்வதைத் தடுத்து நிறுத்தி 5 நாட்களாகப் போராடி வந்தனர்.
தந்தையின் கொலைக்கு நீதி கிடைக்காத விரக்தியில், செவிலியராகப் பணியாற்றிய அவரது மகள் பேபி கனி, தற்கொலை செய்துகொண்டார்

பேபி கனி தனது கையில், தன் தந்தையை கொலை செய்த உறவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார்.
தந்தை மற்றும் மகள் இருவரின் இறப்பால், நெல்லையா புரம் பெரும் சோகத்தில் மூழ்கிய நிலையில் அவர்களது உறவினர்கள் திருநெல்வேலி மருத்துவமனை வளாகத்தில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *