அன்புமணிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கியது யார்? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
1 min read
Who assigned the mango symbol to Anbumani? Supreme Court questions
23.3.2026
பா.ம.க.வில் தந்தை ராமதாஸ் -மகன் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, இரு தரப்பும் கட்சிக்கு உரிமை கோரி வந்த நிலையில், ஆவணங்களின் அடிப்படையில் பா.ம.க.வின் சின்னம் மற்றும் கொடி அன்புமணி தரப்புக்கே சொந்தம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக ராமதாஸ் தரப்பு சுப்ரீம் கோர்ட்டை அணுகியது.
இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “அன்புமணி தரப்புக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கியது யார்?” என்று கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ‘பிரண்ட்லி மேட்ச்’ ஆடுகிறது என்றும் கருத்து தெரிவித்தார். அப்போது ஆவணங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்கியது என்று அன்புமணி தரப்பு கூறியது.
இதையடுத்து, சின்னம் தொடர்பாக இரண்டு நாட்களுக்குள் சிவில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அந்த மனுவை மூன்று நாட்களுக்குள் உரிமையியல் நீதிமன்றம் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.