குடும்ப தலைவிகளுக்கு இலவச ‘பிரிட்ஜ்’– அ.தி.மு.க. 297 தேர்தல் வாக்குறுதி
2 min read
Free ‘bridge’ for female heads of families– AIADMK 297 election promise
24.3.2026
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமிழ்மாநில காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி என பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதனிடையே, தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக ஏற்கனவே 3 கட்டங்களாக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக முழுமையான தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதிமுக தேர்தல் அறிக்கையில் 297 அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
அதிமுக தேர்தல் அறிக்கை முழு விவரம்:-
- வரிச் சுமை மற்றும் விலைவாசி ஏற்றத்தை சமாளிக்க, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 10,000/- சிறப்பு உதவித் தொகை:
நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக ஆட்சியில், கடந்த ஐந்தாண்டு காலமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விஷம்போல் ஏறிவிட்டது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், சொத்து வரி, வீட்டு வரி, மின்சாரக் கட்டணம், குடிநீர் வரி போன்ற பல வரிகளும் உயர்த்தப்பட்டுவிட்டது. இதனால், மக்களின் அன்றாட குடும்பச் சுமை பன்மடங்கு அதிகரித்துவிட்டது. எனவே, மக்களின் இந்தச் சுமையைக் குறைக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் சிறப்பு உதவித் தொகையாக 10,000/- ரூபாய் வழங்கப்படும்.
- மகளிர் நலன் காக்க ‘குல விளக்கு திட்டம்’:
சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும். ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக 2,000/- வழங்கப்படும். இத்தொகை குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
- மகளிரைப் போல, ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம்
நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயனணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
- வீடு இல்லாத குடும்பங்களுக்கு வீடு வழங்கும் அம்மா இல்லம் திட்டம்
“அம்மா இல்லம் திட்டம்” மூலம், கிராமப் புறங்களில் குடியிருப்பதற்கு வீட்டு மணையும் சொந்த வீடும் இல்லாதவர்களுக்கு அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
அதேபோல், நகரப் பகுதிகளில் சொந்த வீடு இவ்வாத ஏழைகளுக்கு “அம்மா இல்லம் திட்டம்”மும் அடுக்குமாடி வீடுகள் எட்டி விலையில்லாமல் வழங்கப்படும்
இந்தத் திட்டத்தில், ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின் மக்கள். அவர்களுடைய மககமகள்கள் திருமணமாகி தனிக் குடித்தனம் செய்கின்றபோது. அவர்களுக்கு முன்னுரிமை வழங்கி வீடுகள் கட்டித் தரப்படும்.
- 100 நாட்கள் வேலையாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்
100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கான இத்திட்டம் 150 நாட்கள் வரை வேலைவாய்ப்பு பெறும் வகையில் செயல்முறைபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்
- அம்மா இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டம்
வேலைக்குச் செய்லும் மகளிருக்கு 25,000/- மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அப்பா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.
- முதியோர் உள்ளிட்டவர்களுக்கான ஒப்யூதியங்கள் ரூ 2,000/-மாக சமூக ஒய்வூதியத் திட்டத்தின் கீழ் முதியோர், விதவைப் பெண்கள். முதிர் கன்னிகள், கமாவனால் கைவிடப்பட்ட பெண்கள் மாற்றம் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூகப் பாதுகாப்பு மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 1200/-ல் இருந்து ரூ. 2,000/-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- வங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி:
மாணவர்கள், பெற்றோர்கள் நயன் காக்கும் பொருட்டு, வங்கிகளில் கல்விக் கடன் பெற்று, வேலையாய்ப்பு கிடைக்காமல், கடன் தவணையை செலுத்த முடியாமல் உள்ளவர்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்யும் வகையில் அத்தொகையை அரசே ஏற்கும்.
- வாழ்வாதார உதவியாக, ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர் வழங்கப்படும்.
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வாழ்வாதார உதவியாக ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும்.
- தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டில், வீரர்கள் காய பிடிக்கும்போது அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும்:
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டின்போது. காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு வீரஅசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டால். அவர்களது குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும். அதேபோல் படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ.2 லட்சம் வழங்கப்படு
அரசாணை வழங்கப்பட்ட இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை எழுச்சியோடு த்துவதற்கு அரசின் சார்பில் மானியமாக ரூ.5 லட்சம் வழங்கப்படும்
ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகின்ற ஆன்லைன் பதிவு முறை ரத்து செய்யப்படும். ஏற்கெனவே இருந்த பழைய நடைமுறையே (Manua} மீண்டும் பின்பற்றப்படும்
- இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் ஏனைய சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர், சுயதொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
- மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்.
- வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாயும் பிளஸ் 2 வரை படித்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாயும், உதவித் தொகையாக வழங்கப்படும்.
- மீன்பிடி தடைக் காலங்களில் மீனவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் நிவாரண உதவித் தொகை 2,000 ரூபாயில் இருந்து 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
- ஒவ்வொரு ஆண்டும் தைப் பொங்கள் அன்று வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்புடன், 1,000/- ரூபாய் ரொக்கமும் வழங்கப்படும்.
- கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையில்லா மின்சாம் 200 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாகவும், விசைத்தறி நெசவாளர்களுக்கு விலையில்லா மின்சாரம் 1000 யூனிட்டில் இருந்து 1400 யூனிட்டாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
- நகரப் பகுதிகளில் நடைபாதை வைத்திருக்கும் சிறு வியாபாரிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்.
- ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தில் பதிவு செய்து. சொந்த ஆட்டோ இல்லாதவர்கள், புதிய ஆட்டோ வாங்குவதற்கு ரூ.75,000/- மானியமாக வழங்கப்படும்.
- ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து பெண்களுக்கும் தாயான, விலையில்லா சேலையும் ஆண்களுக்கு தாமான வேட்டியும் வழங்கப்படும்.
- இல்லத்தரசிகளின் பணி குறைக்க அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு குளிர் பதன பெட்டி (Fridge) விலையில்லாமல் வழங்கப்படும்.
- குடும்ப அட்டைதாரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையில்லா அரிசியோடு, ஒரு கியோ பருப்பு: ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவை விலையில்லாமல் வழங்கப்படும்.
- பேரறிஞர் அண்ணா அவர்கள் கொள்கைப்படி ‘உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்’ என்பதே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தாரக மந்திரம். இந்தியா ஒரு வலுவான வல்லரசாக விளங்க மத்திய அரசு வலுவாக இருக்க வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை. அதேசமயம் மாநில அரசுகளும் அதற்கான நிறி, நிர்வாக உரிமைகளுடன் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அதற்கேற்ட மாநில அரசுகளுக்கு உசிய நிதி நிச்யாகப் பகிர்வை மத்திய அரசு வழங்க வேண்டும் என்பது எங்கள் கொள்கை
- மாநிலங்களுக்கான உரிமைகளைப் பாதுகாக்க இந்திய சியலமைப்பு சட்ட வரம்புக்கு உட்பட்டு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பொறுப்புகளுடன் மாநில அரசுகள் கதந்திரமாக செயல்படத் தேவையான நிதிப் பயிர்வுகளும் பொறுப்புகளும் மாநில அரசுகளுக்கு முறையாக வழங்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. மாறிவரும் சூழ்நிலைகளுக்கேற் நிதிப் பகிர்வு முறையில் கூடுதல் நிதிப் பரில்லை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துவோம்.
- 12-ஆவது நிதி ஆணையத்திற்குப் பிறகு அமைகப்பட்ட மத்திய நிதி ஆணையங்கள், தமிழ் நாட்டிற்கான நிதிப் பகிர்யை படிப்படியாக குறைத்து வருவதைச் கட்டிக்காட்டி வளர்ச்சியடைந்த தமிழ் நாடு போன்ற மாநிலங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நிதிப் பகிர்வு இருக்க வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து தமிழ் நாட்டின் நிதிப் பகிர்வு குறையாமல் பெறுவதை வலியுறுத்துவோம்
- தொகுதிகள் மறுசீரமைப்பில் தமிழ் நாட்டிற்கான தற்போதுள்ள விகிதாச்சார பிரத்திதித்துவம் குறைந்துவிடாமல் இருக்க தொடர்ந்து வலியுறுத்துவோம்.
- கல்வி, மருத்துவம் போன்ற மனிதவள மேம்பாட்டிற்கு உறவும் முக்கிய துறைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்ற எங்கள் நிலைப்பாடு தொடரும். இவற்றை மாநிலபட்டியலுக்கு மாற்ற மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்
- மத்திய வரி வசூலி மேல் வரி கூடுதல் வர் (cess Surcharges) மாநில அவககளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியில் சேர்க்கப்படாமல், அதை வருவித்து முழுவதும் மத்திய அரசே பயன்படுத்துவதால், செஸ் மற்றும் சர்சார்ஜ் போன்ற வரிகள் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியில் சேர்க்கப்பட வேண்டும் என்ற எங்கள் நிலைப்பாடு தொடரும் அதை மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்.
- பொதுமக்களுக்கு அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய ஜாதிச் சான்றிதழ், பிறப்பு, இறப்புச் சான்றிதழ், வருவாய் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், பட்டா மாற்றம், ஓய்வூதியப் பயன்கள், பொது விநியோகத் திட்ட பலன்கள் உள்ளிட்டவற்றை விண்ணப்பித்த பின், குறிப்பிட்ட நாட்களுக்குள் விரைவாகப் பெறுவதை உறுதி செய்யும் வகையில், பொது சேவை மையம் போன்ற கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும்.
- மனுநீதி நாள், குறை தீர்ப்புக் கூட்டங்கள், முதலமைச்சரின் தனிப் பிரிவு போன்ற பல்வேறு பிரிவுகளில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு, முடிவுகள் அனைத்தும் மக்களே நேரடியாக அறிந்துகொள்ள ஏதுவாக இணையதளம் மேம்படுத்தப்படும். இதன்மூலம் பொதுமக்கள் தாங்கள் அளித்த மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தெரிந்துகொள்ளலாம்.
- கடந்த 5 ஆண்டுகளில் துறைகள்தோறும் புரையோடியுள்ள ஊழலைக் கண்டறிந்து, மக்கள் வரிப் பணத்தைச் சுரண்டி ஊழல் செய்த அலுவலர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து, ஏற்கெனவே ஆளுநரிடம் கொடுக்கப்பட்ட புகார்கள் பரிசீலிக்கப்பட்டு முறையான நடவடிக்கைக்கு சம்பந்தப்பட்ட நபர்கள் உட்படுத்தப்படுவார்கள்.
- கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில், கல்வராயன் போன்ற மலைப் பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்களுக்கு ஏற்கெனவே எம்.ஜி.ஆர். பட்டா என்ற பெயரில் வழங்கப்பட்ட பட்டாக்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, முறையாக பட்டா வழங்கப்படும்.
- கரூர் போன்ற சில மாவட்டங்களில், கோயில் இனாம் நில உரிமை தொடர்பான பிரச்சனைகளால், பல ஆண்டுகளாக அந்நிலங்களில் குடியிருக்கும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண ஒரு குழு அமைத்து, ஆவணங்களின் அடிப்படையில் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு இப்பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு காணப்படும்.
- தமிழ் நாட்டில் உள்ள ஆட்சேபணை இல்லாத அரசு நிலங்களில் நீண்ட காலமாக வசித்து வருபவர்கள் அந்த நிலங்களுக்கு அரசு நிர்ணயிக்கும் தொகையை செலுத்தினால் அவர்களுக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
- நெல் உற்பத்திச் செலவை கருத்தில்கொண்டு விவசாயிகள் நலனுக்காக நெல்லுக்கு தற்போது வழங்கி வரும் ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,500/- என விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
- கரும்பு உற்பத்திக்கு ஆகும் செலவை கருத்தில்கொண்டு, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500/- என லாபகரமான நியாய விலை (Fair and Remunerative price) நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
- நீடித்த, நிலைத்த விவசாய வளர்ச்சிக்கு ‘உழவர் உற்பத்தியாளர் குழுக்களே வலுவான ஆதார அமைப்புகள்’ என்பதை கருத்தில்கொண்டு, தமிழ் நாடு முழுவதும் சிறு, குறு விவசாயிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, விவசாய உற்பத்தியாளர் குழுக்கள்/நிறுவனங்கள் அமைப்பதை ஊக்குவிப்பதுடன், ஏற்கெனவே உள்ள நிறுவனங்கள் வலுவாக செயல்பட உரிய வகையில் நிதி மற்றும் பிற உதவிகள் செய்யப்படும். விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் கூட்டமைப்புகளாக செயல்பட உரிய வழிவகை செய்யப்படும். இதன்மூலம், அவர்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவது எளிதாக அமையும். விவசாய உற்பத்தியாளர் குழுக்களின் உற்பத்திப் பொருட்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
- சிறு, குறு விவசாயிகளுக்கு உரம், விதைகள் போன்ற இடுபொருட்கள் வாங்க, உற்பத்தி மானியமாக ஆண்டுக்கு ஹெக்டேர் ஒன்றிற்கு ரூ. 15,000/- வரை வழங்கப்படும்.
- தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம், விவசாயிகள் பெற்றுள்ள வேளாண்மை பயிர் கடன் தள்ளுபடி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
- Dr.M.S. சுவாமிநாதன் தலைமையிலான தேசிய வேளாண் ஆணையத்தின் பரிந்துரைப்படி, அனைத்து உணவு தானிய வேளாண் விளை பொருட்களும், குறிப்பாக உணவு தானியம், பயிர் வகைகள், எண்ணெய் வித்துக்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் (MSP) செய்யப்பட்டு, அதன் பயன் முழுமையாக விவசாயிகளுக்கு கிடைப்பது உறுதி செய்யப்படும். அத்தகைய விளைபொருட்கள் குறைந்தபட்ச விலைக்கு குறைவாக சந்தை நிலவரம் இருக்கும்பொழுது, அந்த குறைந்தபட்ச விலையிலேயே கூட்டுறவு சங்கங்கள், நுகர்பொருள் வாணிபக் கழகம் போன்ற நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்வதற்கு வழிவகை செய்யப்படும்.
- வேளாண் உற்பத்தி தொடர் கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையிலும், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும் வகையிலும், கொள்முதல் செய்யப்படும் உணவு தானியங்கள், பயிர் வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றை மதிப்புக் கூட்டும் தொழில் கட்டமைப்புகளை கூட்டுறவு அமைப்புகளில் ஏற்படுத்த, அரசால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் நியாய விலையில் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும்.
- தற்போது வேளாண் வணிகப் பயிர்களுக்கான காப்பீட்டுத் தொகையில், 5% காப்பீட்டுத் தொகையை விவசாயிகள் செலுத்த வேண்டி உள்ளது. விவசாயிகளின் நலன் காக்கும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் பிரீமியம் கட்டணத் தொகையில் 2% மட்டும் விவசாயிகள் செலுத்தவும், மீதமுள்ள காப்பீட்டுத் தொகையை அரசே செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் வகையில் வேளாண் விளை பொருட்களை, மதிப்புக் கூட்டல் (Value Addition) செய்யும் தொழில்நுட்பங்களை அளித்து, லாபகரமான விலைக்கு விவசாயிகள் விற்பனை செய்ய, சந்தை வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும். இதற்கு விவசாய உற்பத்திக் குழுக்கள், விவசாய உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் அவற்றின் மாவட்ட, மாநில அளவிலான கூட்டமைப்புகள் சிறப்பாக செயல்பட உரிய உதவிகளை அரசே செய்யும். விவசாய உற்பத்திக் குழுக்கள், தேவைக்கேற்ப விவசாய கிட்டங்கிகள் அமைக்க சிறப்பு மானியம் வழங்கப்படும்.
- வேளாண் விளை பொருட்களை சேதமின்றி பாதுகாத்திட, தேவையான இடங்களில் பெருந்திட்ட அளவில் சேமிப்பு கிட்டங்கிகள், உலர் இயந்திரங்கள், குளிர்பதன வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். தனியார், இத்தொழிலில் ஈடுபட சிறப்பு மானியம் வழங்கப்படும்.
- வேளாண் பல்கலைக்கழகத்திற்கு, ஆராய்ச்சி பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு, புதிய கண்டுபிடிப்புகள் மூலம் வேளாண் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் பொருளாதார உற்பத்திப் பெருக்கத்திற்கும், முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கப்படும்.
- நிலமற்ற விவசாய கூலித் தொழிலாளர்களை கணக்கெடுப்பு நடத்தி, அவர்களுக்கு வாழ்வாதார பாதுகாப்பு அளிக்கும் விதமாக வீடு, கல்வி, வேலைவாய்ப்பு, உதவித் தொகை போன்றவை கிடைப்பதை உறுதி செய்ய சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.
- வேளாண் பயிர்களை பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்ற, ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதற்கு ஏதுவாக, கூட்டுறவு வங்கிகள் மூலம் ட்ரோன் வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாய பொறியியல் பிரிவு மூலம் குறைந்த வாடகையில் இவ்வசதிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
- ‘தரிசு நில மேம்பாட்டுத் திட்டம்’ தனி இயக்கமாக செயல்படும். அத்தகைய விவசாய நிலங்களில், விவசாயக் காடுகள் வளர்ப்பு (Farm Forestry) திட்டம் ஊக்குவிக்கப்படும். விவசாய நிலங்களிலும் வரப்பு போன்ற பகுதிகளில் தீவன மரங்கள், வன மரங்கள் வளர்ப்பது ஊக்குவிக்கப்படும்.
- இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் நிதியுதவி, மானியம் போன்ற சலுகைகளை அரசு அளிக்கும். அதற்கான ஆய்வுச் சான்றுகள் பெறுவது, சந்தை கட்டமைப்புகள் போன்றவை மாவட்ட, மாநில அளவில் வலுப்படுத்தப்படும்.
- புதிய விவசாய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கும் அனைத்து விவசாயிகளுக்கும், மின்கம்பங்களுக்குக் காத்திருக்காமல், அவர்கள் விரும்பினால் நேரடியாக 100% அரசு மானியத்தில் “சூரிய ஒளி பம்ப் செட்டுகள்” வழங்கப்படும்.
- விவசாயப் பணியின்போது, விவசாயிகள் இடி, மின்னல் தாக்கியோ, விஷப் பாம்பு கடித்தோ, வனவிலங்குகளால் தாக்கப்பட்டோ உயிரிழந்தால், அவர்களது குடும்பத்திற்கு அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.
- தற்போது மத்திய அரசாங்கம் அறிவித்திருக்கும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாத திட்டத்தின் கீழ் (கிராமம் 2025) (VB-G RAM G) ஆட்டுக் கொட்டகை, மாட்டுக் கொட்டகை போன்றவை அமைத்து விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்பட, மானியத்துடன் கறவை பசுக்கள், ஆடுகள் வளர்ப்பு, கோழிகள் வளர்ப்பு போன்ற தொழில்கள் செய்ய சிறு, குறு விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும்.
- தற்போதைய திமுக ஆட்சியில், டெல்டா மாவட்டத்தில் பல லட்சம் டன் நெல் கொள்முதல் செய்து அதை பொறுப்பற்ற முறையில் மழையில் நனைத்து விவசாயிகளின் உழைப்பும், பணமும் வீணாக்கப்பட்டுள்ளது. எனவே, டெல்டா மாவட்டங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உலர்களம் மற்றும் சேமிப்பு கிடங்குகள் அமைப்பதுடன், அனைத்து தாலுகா அளவிலும் போதுமான அளவில் கிடங்கு வசதிகளும் அமைத்து, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
- விவசாயிகள் விளைவிக்கும் காய்கள், பழங்கள் மற்றும் பிற விளைபொருட்களை அடிப்படையாகக் கொண்டு, உணவு பதப்படுத்தும் தொழிலை ஊக்குவிக்க, உணவு பதப்படுத்தும் தொழில் பூங்காக்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்தப்படும்.
- கோவை, வையம்பாளையத்தில் 2.617617 உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அய்யா அவர்கள் வாழ்ந்த வீட்டினை கையகப்படுத்தி நினைவு இல்லமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
- தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாய விளை பொருட்களுக்கும், பால் பொருட்களுக்கும், மாவட்டத்தின் மையப் பகுதியில் குளிர்சாதனக் கிடங்கு (Cold Storage) ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும். இக்கிடங்குகளில் காலி இருப்பைக் கண்டறிய செயலி ஒன்று உருவாக்கப்படும். 10 கிலோ மீட்டர் தொலைவிற்குள் விவசாயிகள் கிடங்கைச் சென்றடையும் வகையில் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.
- சிறு, குறு விவசாயிகளுக்கு, அறுவடை நெல்லை பாதுகாக்க மானிய விலையில் தார் பாய் வழங்கப்படும்.
- விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள், நீர்நிலைகளுக்கு பாதிப்பு இல்லாமல், உரிய அனுமதியுடன் தடையின்றி வண்டல் மண் எடுத்துச் செல்ல வழிவகை ஏற்படுத்தப்படும்.
- வாய்ப்புள்ள மாவட்டங்களில், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் உதவியோடு பொது சமுதாய கிணறுகள் மற்றும் சமுதாய போர்வெல்கள் உருவாக்கப்பட்டு, வேளாண் நிலங்களுக்கு பாசன வசதியும், அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வசதியும் செய்ய ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்படும்.
- ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்’ பெயரில் தமிழ் நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட கல்லூரிகளில் இயற்கை வேளாண் கல்வி மையங்கள் உருவாக்கப்படும். இதற்கென பட்டய படிப்புகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் இயற்கை விவசாயம் ஊக்கப்படுத்தப்பட்டு, விவசாய விலை பொருட்களை சந்தைப்படுத்த அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்படும்.
- பாசனத்திற்கு மும்முனை மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
- வேளாண் துறையில் உள்ள சவால்களை ஆராய்ந்து, அவற்றை எதிர்கொள்ளத் தேவையான யுக்திகளையும், திட்டங்களையும் உடனுக்குடன் தீட்டி, வேளாண் தொழிலை மேலும் லாபகரமாக்கி, வேளாண் பெருமக்களின் வருவாயைப் பெருக்கி, அவர்களின் நலன் காக்க மாநில வேளாண்மை ஆணையம் அமைக்கப்படும். இந்த ஆணையத்தில் விவசாயப் பிரதிநிதிகள் உரிய பங்காற்றுவார்கள்.
- குறைந்த வாடகையில் உள்ளூரிலேயே பண்ணை இயந்திரங்கள் கூடுதலாக கிடைக்கும் வகையில், பண்ணை இயந்திரமயமாக்கல் ஊக்கப்படுத்தப்படும். வேளாண் இயந்திரங்களுக்கான தொழிற்கூடங்கள் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தேவையான இடங்களில் பிரத்யேகமாக அமைக்கப்படும். வேளாண்மைக்கு தேவைப்படும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை விவசாயிகள் எளிதில் பெற்று பயன்படுத்த வசதியாக ‘முதலமைச்சர்-விவசாயி வங்கி திட்டம்’ செயல்படுத்தப்படும். தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் இந்த வங்கி தொடங்கப்படும். இந்த வங்கியின் மூலம் விவசாயத்திற்கு தேவையான டிராக்டர்கள், புல்டோசர்கள், நெல் அறுவடை இயந்திரங்கள், வைக்கோல் கட்டும் இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து வகை உபகரணங்களும் வாடகை முறையில் வழங்கப்படும்.
- நீலகிரி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தி செய்யப்படும் இடங்களைக் கண்டறிந்து, அங்கு பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்படும்.
- மானாவாரி நிலங்களில் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், உரிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, ஒருங்கிணைந்த பண்ணை மேலாண்மை, மேம்பட்ட பயிர் சாகுபடி முறைகள் போன்றவற்றை பரவலாக்குவதுடன், மானாவாரி நிலங்களில் விளையும் பொருட்களை மதிப்புக் கூட்டி விவசாயிகளே பயன்பெற ‘உழவர் உற்பத்தியாளர் குழுக்கள்’ ஏற்படுத்தப்படும். மானாவாரி விவசாயிகள், கறவை மாடுகள், ஆடுகள், கோழிகள் வளர்ப்புத் திட்டம் மூலம் வருடம் முழுவதும் வருவாய் பெற வழிவகை செய்யப்படும்.
- சொட்டுநீர் பாசனம் மற்றும் விவசாய உபகரணங்களுக்கு வழங்கப்படும் மானியங்கள், விவசாயிகளின் செலுத்தப்படும். வங்கிக் கணக்கிற்கே நேரடியாக
- GST வரி விதிப்பு 18%-த்தில் இருந்து 5%-மாகக் குறைக்கும் வகையில், பம்பு செட்டுகளை விவசாய இயந்திர உபகரணங்களுக்கான பட்டியலில் சேர்ப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்துவோம்.
- தென்னையில் இருந்து இறக்கப்படும் நீரா பானத்தை பதப்படுத்தும் தொழிற்சாலைகளை ஏற்படுத்தி, அதனை நாடு முழுவதும் விற்பனை செய்து, தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பெருக்கிட நடவடிக்கை எடுக்கப்படும்.
- கொப்பறை தேங்காய் விலை குறையும்போதெல்லாம், தென்னை விவசாயிகளிடமிருந்து கொப்பறையை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
- தமிழகத்தில் விவசாயம் சார்ந்த தொழில்களில், தென்னை நார் தொழில் மிக முக்கியமான ஒன்றாகும். தேங்காய் மட்டைகளில் இருந்து உற்பத்தியாகும் தென்னை நார்கள் மற்றும் பித்துக் கட்டிகள் உலகம் முழுவதும் சுமார் 3,000 கோடி ரூபாய் அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தேங்காய் நார் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் மின் கட்டணச் சலுகை வழங்கப்படும். தேங்காய் நார் மூலம் மதிப்புக் கூட்டு பொருட்கள் செய்யும் தொழில் ஊக்குவிக்கப்படும்.
- தமிழ் நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகள், குறிப்பாக நீர் பாசன ஏரிகள் குடிநீர் ஊரணிகள், கால்வாய்கள் போன்றவை குடிமராமத்து திட்டத்தின் மூலம் சீரமைக்கப்பட்டு, நீர் ஆதாரம் பெருக்கப்படும். குடிமராமத்துப் பணிகள் அந்தந்த பகுதிகளைச் சார்ந்த பாசன விவசாயிகள் சங்கத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும்.
- நீர்ப்பாசன கண்மாய்கள், வரத்துக் கால்வாய்கள் ஆகியவற்றில் பெருகியுள்ள சீமைக் கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்படும். அதேபோல் முக்கிய ஆறுகளின் படுகைகளில் வெள்ள நீரோட்டத்தை தடுக்கும் வகையில் உள்ள சீமை கருவேல மரங்கள் நீக்கப்பட்டு ஆறுகளின் படுகைகளை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- பரம்பிக்குளம்-ஆழியாறு ஒப்பந்தத்தை புதுப்பிக்கவும், அந்தத் திட்டத்தில் இன்னும் நிறைவேற்றாமல் உள்ள ஆனைமலையாறு அணை மற்றும் நல்லாறு அணைகள் கட்டுவது குறித்து உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு, திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆனைமலையாறு அணைக்கட்டு மற்றும் நல்லாறு அணைக்கட்டு கட்டப்படுவதற்குண்டான அனைத்து மேல் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு விரைந்து முடிக்கப்படும்.
- கூடலூர் பகுதியில் உற்பத்தியாகும் நீர் கேரள சாலியாற்றில் கலந்து, கடலில் வீணாகிறது. எனவே, விவசாயிகளின் நீண்டகால கனவுத் திட்டமான பாண்டியாறு- புன்னம்புழா திட்டம் முழுமையாக விரைந்து செயல்படுத்தப்படும்.
- விவசாயிகளின் நலன் கருதி அத்திக்கடவு-அவிநாசி திட்டம் Phase-2 முனைப்போடு செயல்படுத்தப்படும்.
- மேட்டூர் அணையின் உபரி நீரை பயன்படுத்தும் விதமாக, சரபங்கா நீரேற்றுத் திட்டத்தின் மூலம் 100 ஏரிகளுக்கு நீர் நிரப்பும் பணிகள் விரைந்து முடிக்கப்படும். அடுத்தகட்ட நடவடிக்கையாக, சேலம் பனைமரத்துப்பட்டி ஏரியில் நீர் நிரப்பும் பணியும்; ஏற்காடு, ஆத்தூர் மற்றும் கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதிகளில் ஒடும் வசிஷ்ட நதி மற்றும் கிளை நதிகளோடு இணைத்து அப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் மற்றும் ஏரிகளில் தண்ணீர் நிரப்புவதன் மூலம் அப்பகுதியின் பாசன வசதி மற்றும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும். இப்பணியை உடனடியாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
- மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை, நீரேற்று பாசனம் மூலம் மேட்டூர், பவானி, அந்தியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள ஏரிகளை நிரப்பி, அப்பகுதி மக்களின் குடிநீர் மற்றும் பாசன வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
- மேட்டூர் நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேறும் உபரி நீரை புதிய இணைப்பு கால்வாய் மூலம் சரபங்கா நதி, திருமணிமுத்தாறு மற்றும் கரைபொட்டனார் ஆகிய ஆறுகளுடன் இணைத்து சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மொத்தமாக சுமார் 98 ஏரிகள் மற்றும் குட்டைகள் மூலம் பாசனம் பெறும் பரப்பான 16 ஆயிரத்து 740 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- தமிழகத்தில் உள்ள ஊராட்சிப் பகுதிகள் அனைத்திலும் பாதுகாக்கப்பட்ட, தடையற்ற குடிநீர் வழங்கப்படும். குடிநீர் தட்டுப்பாடுள்ள கிராமங்களைக் கண்டறிந்து அப்பகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- காவிரி வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைவில் முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன வசதி மேம்படும்.
- கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கி வைக்கும் பணி தொடரும்.
- மாண்புமிகு தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் தலைமையிலான அரசால் துவக்கப்பட்ட நீர்ப்பாசன கால்வாய்த் திட்டங்களான அத்திக்கடவு-அவிநாசி, சரபங்கா, தாமிரபரணி-கருமேனியாறு, காவிரி-குண்டாறு, காவிரி உப வடிநில புனரமைப்பு, கல்லணைக்கு கால்வாய் புனரமைப்பு, கீழ்பவானிக் கால்வாய் புனரமைப்பு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எண்ணேகோல், ஜெர்தலாவ், அளியாளம் உள்ளிட்ட நீர் பாசனக் கால்வாய் திட்டங்கள் அனைத்தும் விரைந்து நிறைவேற்றப்படும்.
- மாநிலம் முழுவதும் உள்ள நதி, ஆறு, ஓடை போன்றவற்றில், தேவையான இடங்களில் தடுப்பணைகள் அமைத்து நிலத்தடி நீர் செறிவூட்டப்படும்.
- தென் தமிழகத்தின் நீர் மேலாண்மையை முன்னெடுத்துச் செல்லும் விதமாக, தாமிரபரணி ஆற்றின் உபநீரை தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதற்கான ஒரு புதிய நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்.
- தாமிரபரணி-வைப்பாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதற்குரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, இத்திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
- மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களால் செயல்படுத்தப்பட்ட விலையில்லா கறவை மாடு, ஆடுகள் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. கிராமப்புற மக்களின் பொருளாதாரம் மேம்பாடு அடையும் வகையிலான இத்திட்டத்தினை, ஆண்டுதோறும் 2 லட்சம் பயனாளிகள் பயன்பெறும் வகையில் பெரிய அளவில் தொடர நடவடிக்கை எடுக்கப்படும்.
- விவசாயிகளின் நலன் கருதியும், பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கால்நடை வளத்தைப் பெருக்கவும். சேலம் மாவட்டம், தலைவாசலில் அமைக்கப்பட்டுள்ள கால்நடைப் பூங்கா மேம்படுத்தப்பட்டு, அதன் வாயிலாக, திட்டமிட்டபடி ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதிக பால் தரும் கலப்பின பசுக்களை உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும், கால்நடை உற்பத்தி சார்ந்த தொழில் மேம்பாட்டிற்கும் இந்த மையம் ஒரு முக்கிய கேந்திரமாக அமையும்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
- உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட தீவனங்கள் மற்றும் செறிவூட்டப்பட்ட தீவனப் பெட்டகங்கள், கால்நடை வளர்ப்போருக்கு சிறப்பு மானிய விலையில் வழங்கப்படும். அத்தகைய செறிவூட்டப்பட்ட தீவன உற்பத்தி செய்யும் தொழில் முனைவோருக்கு உரிய மானியம் வழங்கப்படும். இதன் வாயிலாக, கறவை மாடுகளின் பால் உற்பத்தித் திறன் பெருகும்.
- ‘ஆவின்’ நிறுவனம் வலுவாக செயல்படும் வகையில், மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கங்களின் உற்பத்தி கட்டமைப்புகள், ‘நபார்டு’ நிதி உதவியுடன் மேம்படுத்தப்படும் பால் கொள்முதல் அதிகரிக்கப்படும். வெண்ணெய் நெய், ஐஸ்கிரீம், பாலாடை கட்டி போன்ற பால் உபபொருட்கள் அதிக அளவில் உற்பத்தி செய்து வாபம் ஈட்டும் வகையில் “ஆவின்’ நிறுவனம் மேம்படுத்தப்படும்.
- கால்நடை வளம் குறைந்துள்ள மாவட்டங்களில், அதன் வளத்தைப் பெருக்க புதிய கால்நடை துணை நிலையங்கள், கால்நடை மருந்தகங்கள் போன்ற கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும்.
- தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கப் பணியாளர்களின், பணி வரைமுறைகள் (Service Rules) உருவாக்கப்படும். அவர்களை அரசு சார்பு பணியாளர்களாகவோ அல்லது கூட்டுறவு பணியாளர்களாகவோ உறுதி செய்யப்பட்ட நிலைக்கு கொண்டுவா நடவடிக்கை எடுக்கப்படும்.
- சுடலிலே மீன் பிடிக்கின்றபொழுது விபத்துக்குள்ளாகி மீட்சுப்படாமல் இருக்கின்ற மீனவர்களின் குடும்பங்களுக்கும்; மருத்துவ வசதி வழங்கப்படாமல் நோயினால் கடலில் உயிரிழக்கின்ற மீனவர்களின் குடும்பங்களுக்கும். விபத்துக் காப்பீடாக ரூ. 25 லட்சம் வழங்கப்படும்.
- கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும்போது விபத்துக்குளாகின்ற, நோய்வாய்ப்படுகின்ற மற்றும் காணாமல் போகின்ற மீனவர்களை விரைந்து மீட்சுவும், அவர்களுக்கு உடனடி மருத்துவ வசதிகளை பெறச் செய்யவும் செயற்கைக்கோள் இணைப்புடன் கூடிய கடல் ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்படுத்தப்படும்.
- கடலிலேயே பாதிப்புக்குள்ளாகக் கூடிய மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் மீட்பதற்கு. மீனவர் மீட்புக் குழு ஏற்படுத்தப்படும். மேலும், CHU லட்சம் ரூபாய் முதலீட்டில் கடலில் மீன் பிடிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்ற விசைப் படகுகள், நாட்டுப் படகுகள் பழுதாகி நடுக்கடலில் நிற்கின்றபொழுது, அவற்றை மீட்டு வருவதற்கு இழுவை படகு வசதி ஏற்படுத்தப்படும்.
- கடலிலே ஏற்படுகின்ற பேரிடர்கள் பற்றிய செய்தியை நிலப் பகுதிகளில் உடனுக்குடன் வழங்கப்படுவது போன்று, ஆழ் கடலில் தங்கி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கும் வழங்கிடும் வகையில், சக்தி வாய்ந்த தொலைத் தொடர்பு மையம் சுடலோர மாவட்டங்களில் ஏற்படுத்தப்படும். மேலும், ஆழ்கடல் மீன்பிடி விசைப் படகுகளுக்கு ரேடியோ டெலிபோன் வழங்கப்படும்.
- கடற்கரை மாவட்டங்களில், தேவைப்படும் இடங்களில் ஒருங்கிணைந்த மீன்பிடித் துறைமுகங்கள் (Integrated Fishing Harbour) அமைக்கப்படும். அவ்வாறு அமைக்கப்படும் மீன்பிடித் துறைமுகங்கள் அனைத்து வசதிகளையும் உள்ளடங்கியதாக அமையும்.
- மீனவர்களுக்கு மாதா மாதம் மானிய விலையில் வழங்கப்படும் டீசல் 500 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும். விற்பனை வரி ரத்து செய்யப்பட்ட எரிபொருள் மாதம் 4000 லிட்டர் வீதம் மீன்பிடித் தொழிலுக்காக வழங்கப்படும்.
- மீனவ மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு, மீனவர் கூட்டுறவு சங்கங்கள் வலுப்படுத்தப்படும். மேலும், நவீன படகுகள் போன்ற தளவாடங்கள் வாங்க, மீனவர்களுக்கு தனியாகவோ, குழுவாகவோ செயல்பட, மீனவ சங்கங்கள் மூலம் மானியத்துடன் கூடிய கடன் வசதி செய்து தரப்படும்.
- உள்நாட்டு மீனவர்கள் நலன் கருதி, ஏரிகளிலும் குளங்களிலும், மீன் வளர்ப்பை ஊக்கப்படுத்த சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். குளங்களிலும் ஆறுகளிலும் உள்நாட்டு மீளவர்கள் சிரமமின்றி மீன்பிடிக்க, மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வலை மற்றும் உபகரணங்கள் விலையில்லாமல் வழங்கப்படும்.
- மீனவப் பெண்களுக்கு நலத் திட்டங்கள் முழுமையாகப் பெற எதுவாக பயோமெட்ரிக் அட்டை வழங்கப்படும். மீனவப் பெண்கள் சுய உதவிக் குழுக்கள் மூலம் மீன் உற்பத்தியாளர் குழுக்கள் அமைத்து, சுய உதவிக் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் போன்று அனைத்து சலுகைகளையும் பெற வழிவகை செய்யப்படும்.
- பெருவெள்ளம் காலங்களில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைத் தடுக்க, அனைத்து முகத்துவாரங்களும் தூர் வாரப்பட்டு, நிலைப்படுத்தப்பட்டு, அகலப்படுத்தப்படும். தேவைப்படும் இடங்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
102 மீனவர்கள் பிடிக்கும் மீனை. மீன் இறக்கும் தளங்களில் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு நவீன மீன் பதனிடும் நிலையம், நவீன மீன் சந்தை. பசுமை மீன் சந்தை ஆகியன உருவாக்கப்படும்.
- 65 வயதுக்கு மேற்பட்ட மீனவர்களுக்கு, மீனவர் நல வாரியம் மூலம் மாதம் 2,500 ரூபாய் ஒய்வூதியம் வழங்கப்படும்.
104, அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்பு இடஒதுக்கீடு 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
105 ஆரம்பக் கல்வி, உயர்நிலைக் கல்வி போன்றவற்றில் மாணவர்களின் கற்றல் மற்றும் வாசிப்புத் திறன் குறிப்பாக, கணிதத் திறன் மற்றும் மொழித் திறன் போன்றவற்றை மேம்படுத்தும் வகையில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளில் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ‘STEM learning’ மையங்கள் ஏற்படுத்தப்படும்.
106 வளர்ந்து வரும் கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறியியல் துறையில் தமிழக மாணவர்கள் சிறந்து வினங்கிட, 6 முதல் 10-ஆம் வகுப்புகளுக்கு ஏற்கெனவே உள்ள ஐந்து பாடங்களுடன், கணினி அறிவியலை சேர்த்து ஆறு பாடங்களாக கற்பிக்கும் வகையில் பாடத் திட்டம் மாற்றி அமைக்கப்படும்.
- மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் உள்ள ஏற்க முடியாத சில ஷரத்துகளைக் குறிப்பிட்டு, அவற்றில் இருந்து தமிழ் நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக அறிஞர் அண்ணா கண்ட இருமொழிக் கொள்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஷரத்துகள் ஏற்புடையதல்ல என்று வலியுறுத்தி வருகிறோம். இந்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை. தமிழ் நாட்டின் உரிமைகள், அதன் கொள்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த வகையான ஷரத்துகளும் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற எங்கள் நிலைப்பாட்டை தொடர்ந்து கடைபிடிப்போம்.
108 கல்வி வளர்ச்சியை கருத்தில்கொண்டு பள்ளிக் கல்வித் துறையில் தற்போது காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.
- பருவகால மாற்றம் (Cimate Change) குறித்து மாணவர்களின் பாடத் திட்டத்தில் சேர்க்கப்படும்.
110.அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மா மாணவியருக்கு உரிய காலத்தில் விலையில்லா மடிக் கணினி வழங்கப்படும்.
- மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில், கல்வித் தொலைக்காட்சி மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
112 உலகளவில் புகழ்பெற்ற ஹார்வேர்டு, ஆக்ஸ்போர்டு, ஏல், கேம்பிரிஜ், MIT போன்ற பல்கலைக்கழகங்களுடன் இணைந்து 10 சர்வதேச தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் தமிழ் நாட்டில் தொடங்கப்படும்.
- தற்போது இயங்கிவரும் ஊர்ப்புற நூலகங்கள் கிளை நூலகங்களாக தரம் உயர்த்தப்படும். மேலும், ஊர்ப்புற நூலகங்களில் உள்ள நூலகர் காலிப் பணியிடங்கள் முழுவதும் நிரப்பப்படும்.
- மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் சிந்தனையில் உதித்த. அனைவராலும் போற்றப்படுகின்ற தமிழ் நாடு முழுவதும் துவங்கப்பட்ட சுமார் 2000 அம்மா மினி கிளினிக்குகள் நவீன மருத்துவ வசதிகளுடன் மீண்டும் துவக்கப்படும். இவை, நகர்புறம் மற்றும் கிராமப் புறங்களில் மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்யும்.
- அரசு காப்பீடுத் திட்டத்தில் சேர்ந்துள்ள ஏழை அல்லது நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவரும் தனியார் மருத்துவமனைகளில் இருதய அறுவை சிகிச்சை, புற்றுநோய் போன்ற பெரிய சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது, செலவு வரம்பின்றி அதற்கான முழு தொகையையும் அரசே நேரடியாக செலுத்தும்.
- மருத்துவர் மற்றும் பல் மருத்துவர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். உதவிப் பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
- 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் செவிலியர்களின் பணி, நிரந்தரம் மற்றும் பணி வரன்முறை செய்யப்படும். மேலும், வேலைப் பளுவை குறைக்கும் வகையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
118.அம்மா முழு உடல் மருத்துவ பரிசோதனை திட்டத்தில், புற்று நோய் உள்ளதா என்பதைக் கண்டறியும் பரிசோதனைகளையும் மேற்கொள்ள, அதற்கு தேவையான பெட் ஸ்கேனிங் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, புற்று நோய் பாதிப்பு அறிகுறிகள் இருந்தால், அதற்கு உரிய மருத்துவ சிசிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்படுபவர்களைக் கண்டறிவதற்கு கிராமப் புறங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். அவ்வாறு நோய் பாதிப்புக்குள்ளான நபர்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு, அவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்குவது கண்காணிக்கப்படும். மருத்துவ முகாம்களில் தொற்றுநோய் உள்ள நோயாளிகள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கும் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க தாலுகா மற்றும் மாவட்ட மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, உயரிய சிகிச்சை அளிப்பது உறுதி செய்யப்படும்.
- குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை (IVF) மூலம் குழந்தை பெறும் வாய்ப்பு, ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு நவீன-fertility சிகிச்சை மருத்துவ சேவையை தமிழ் நாட்டில் விரிவுபடுத்துதல், மேலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கட்டணமில்லா மருத்துவமனைகளில் வழங்கப்படும். IVF சிகிச்சை
- புற்றுநோய் சிகிச்சைக்கென Linear Accelerator வசதிகள் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் ஏற்படுத்தப்படும். அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையம் தொடங்கப்படும். இங்கு ரேடியேஷன் மற்றும் கீமோதெரப்பி சிகிச்சைகள் வழங்கப்படும்.
- ஏழை, எளிய மக்களுக்கு தரமான மருத்துவ வசதிகளை வழங்க, ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் ஆகியவற்றின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு, தரமான சிகிச்சை வழங்குவது உறுதியளிக்கப்படும்.
- இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஆட்சி மொழியாக உள்ள, தமிழ் மொழி உட்பட அனைத்தையும் மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக அறிவித்து, ஆட்சி மொழி சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்துவோம்.
- சென்னை உயர்நீதி மன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
- மத்திய அரசு போட்டித் தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து தேர்வுகளும் தமிழில் நடத்த வலியுறுத்தப்படும்.
- தற்போது உள்ள நடைமுறைப்படி பிற மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழங்களில் தமிழ் இருக்கைகள் ஏற்படுத்தப்பட நிதியுதவி வழங்கப்படும். மேலும், 25 சர்வதேச பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- பழந்தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றின் தொன்மையை பறைசாற்றும் சிவகங்கை மாவட்டம்-கீழடி, தூத்துக்குடி மாவட்டம்-ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை, ஈரோடு மாவட்டம்-கொடுமணல், அரியலூர் மாவட்டம்-கங்கைகொண்ட சோழபுரம், திருவள்ளூர் மாவட்டம்-பட்டறைபெரும்புதூர், மாவட்டம்-அழகன்குளம், இராமநாதபுரம் கிருஷ்ணகிரி மாவட்டம்-மயிலாடும்பாறை ஆகிய இடங்களில் அகழாய்வுப் பணிகள் தடையின்றி தொடர விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- மகளிர் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், கிராமப் புறங்களில் தொழில் வளத்தைப் பெருக்கி வேலைவாய்ப்பை உருவாக்கவும். மகளிர் தனியாகவும், சுய உதவிக் குழுவாகவும் தொழில் துவங்க ஒரு நபருக்கு ரூ. 10 ஆயிரம் வரை மானிய உதவி வழங்கி, 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் சிறு/குறு தொழில் நிறுவனங்கள் தொடங்க வழிவகை செய்யப்படும். இத்தகைய தொழில்கள் தொகுப்புகளாக செயல்படத் (Clusters) தேவையான தொடர் கட்டமைப்புகளை அரசே ஏற்படுத்தும்.
- மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மேம்படுத்தப்பட்டு பொருளாதார உற்பத்தி மையங்களாக உருவெடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண உதவித் திட்டம் தொடர்ந்திட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், திருமண உதவித் திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தாலிக்குத் தங்கம் திட்டத்துடன் சேர்த்து விலையில்லா பட்டுவேட்டி-சட்டை பட்டு சேலைகள் வழங்கப்படும். இதனால் நெசவாளர்களும் பயனடைவார்கள்.
131.கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் ஆகியோர் பிறரின் உதவியை எதிர்பார்க்காமல், அவர்களுக்கான நலவாரியத்தின் வாயிலாக சுயதொழில் செய்ய மானியத்துடன் கூடிய கடன் மற்றும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை போன்ற சலுகைகள் விரைந்து கிடைப்பது உறுதிபடுத்தப்படும். கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு சான்றிதழ் வழங்குவது, குடும்பத் தலைவர் மரணமடைந்தால் இழப்பீடு வழங்குவது போன்ற நடவடிக்கைகள் எளிமைப்படுத்தப்படும்.
- அரசு அங்கீகாரம் பெற்ற தையல் பயிற்சி நிலையங்களில், பயிற்சி முடித்த பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படும். பயிற்சி பெற்றவர்கள் அதிக எண்ணிக்கை உள்ள பகுதிகளில் தையல் கூடங்கள் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் அமைக்கப்படும்.
- டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும்.
- பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின், வைப்பு நிதியாக வழங்கப்பட்டு வந்த முதலீட்டுத் தொகை 50,000 ரூபாயில் இருந்து 1,00,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
- எந்த நேரத்திலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில், சென்னையில் செயல்பட்டு வரும் காவலன் செயலி, மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
- பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்ட அம்மா ரோந்து வாகனங்கள், மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
- தமிழகம் முழுவதும் உள்ள நகரங்களில் CCTV கண்காணிப்பில் சென்னை முதலிடம் வகிக்கிறது. சட்டம்-ஒழுங்கை மேலும் மேம்படுத்தும் விதமாக, இரண்டாம் கட்ட நகரங்களிலும் உலகத் தரத்திலான கட்டமைப்பு உருவாக்கப்படும்.
- படித்த மகளிர் கிராமப்புறங்களில் இருந்து நகர்ப் புறங்களுக்கு வந்து பணியாற்றும்போது பாதுகாப்பான இருப்பிட வசதிகள் இல்லை என்பதை கருத்தில்கொண்டு நகர்ப் புறங்களில் ‘மகளிர் தங்கும் விடுதிகள்’ கட்டும் திட்டம் அம்மா அவர்களின் ஆட்சியில் தொடங்கப்பட்டது. இத்திட்டம் எனது தலைமையிலான அம்மாவின் அரசிலும் தொடரப்பட்டது. இதன் தேவை அதிகம் உள்ளதைக் கருத்திற்கொண்டு, நகர்ப் புறங்களில் வேலைக்குச் செல்லும் மகளிர் பாதுகாப்பாக தங்குவதற்கு வசதியாக, நகர/மாநகரப் பகுதிகளில் அதிக அளவில் மகளிர் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்.
- தமிழ் நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்தும் நோக்கில், படிப்படியாக மதுபானக் கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
- அம்மா ஆட்சியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டதைப் போல், தொடர்ந்து இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தியும், அவ்வப்போது தமிழ் நாட்டிலேயே முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி தொழில் வளம் பெருக்கப்படும். இதன்மூலம் தமிழ் நாடு ‘ஒன் ட்ரில்லியன் டாலர் (One Trillion Dollar Economy) பொருளாதாரமாக’ விரைவில் மாறிட வழிவகை செய்யப்படும்.
- தமிழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மிகப் பெரிய அளவில் உயர்த்தி, தொழில் வளத்தைப் பெருக்கி, வேலைவாய்ப்பைப் பெருக்க, தமிழ் நாடு முழுவதும் பரவலாக தொழில் வளர்ச்சி பெறுவதை உறுதி செய்து, குறிப்பாக தென் மாவட்டங்கள் தொழில் வளம் பெருசு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
- பெரிய தொழில் முதலீட்டாளர்களும், வெளிநாட்டு முதலீட்டாளர்களும்
சிரமமின்றி அரசை அணுகி வெளிப்படையான முறையிலும், திறமையான முறையிலும், துரிதமாக முதலீடு செய்து உற்பத்தியை தொடங்குவதற்கு ஏதுவாக, ‘ஒற்றை சாளர முறை’ மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய நேரடி கட்டுப்பாட்டில், மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியின் தலைமையில் இயங்கி, அனைத்து அனுமதிகளையும் குறித்த காலத்தில் ஒருங்கிணைத்துப் பெற நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது செயல்படும் Guidance Bureau-தொழில் முனைவோர் வழிகாட்டி மையம் இந்த அமைப்பின்கீழ் கொண்டுவரப்படும். இதனால், பெரிய தொழில் முனைவோர்/வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எந்தத் துறையையும் தனித் தனியாக அணுக வேண்டிய அவசியம் இருக்காது. இதன்மூலம் தமிழ் நாடு தொழில் முனைவோருக்கு முதலீடு செய்ய உகந்த மாநிலமாக உருவெடுக்கும்.
- தென் மாவட்டங்களில், குறிப்பாக மதுரை, தூத்துக்குடி தொழில் வழித்தடத் திட்டத்தை செயல்படுத்த குறிப்பிட்ட இடங்களில் தொழில் முதலீட்டிற்கு வசதியாக தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். அருப்புக்கோட்டை, எட்டயபுரம் பகுதிகளில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும். தூத்துக்குடி துறைமுகத்தை மையமாகக் கொண்டு, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் தொழில் முதலீடுகள் செய்ய முதலீட்டாளர்கள் ஊக்கப்படுத்தப்படுவார்கள். இதற்கு தேவைக்கேற்ப சிறப்பு சலுகைகள் வழங்கப்படும்.
- சென்னை Medical Tourism என்ற நிலையில் மேம்படுத்தவும் மற்ற நகரங்களுக்கும் மருத்துவச் சுற்றுலா (Medical Tourism) திட்டத்தை விரிவுபடுத்த பல்வேறு உலகளாவிய கருத்தரங்குகளும் பல்வேறு நாடுகளில் Trade Fair நடத்தி, வெளிநாட்டில் உள்ள நோயாளிகளுக்கு தமிழகத்தில் நியாயமான கட்டணத்தில் சிகிச்சைகள் அளிக்கப்படுவதை உறுதி செய்து, அவர்களுடைய வருகையின் மூலம் மருத்துவத் துறைக்கும் அந்நிய செலாவணியை ஈட்டுதல் போன்றவை செயல்படுத்தப்படும்.
- இந்தியாவில் GI குறியீடு பெற்ற பொருட்களின் வரிசையில் தமிழ் நாடு இரண்டாம் இடம் பெற்றுள்ளது. தமிழ் நாட்டில் இதுவரை 74 பொருட்களுக்கு GI (புவிசார் குறியீடு) தரப்பட்டுள்ளது. One Distinct One Product (ODOP) திட்டத்தின்கீழ், தமிழ் நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பொருள், சிறப்பு அடையாளமாகக் காணப்படுகிறது. அந்தப் பொருட்களுக்கு GI Tag மற்றும் ODOP அடையாளம் வழங்கப்பட்டு வளர்ச்சி அடைந்து வருகிறது. தொழில் முனைவோர் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு உதவிட சிறப்பு தனி வாரியம் அமைத்து, ஏற்றுமதி வணிகர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கிட வழிவகை செய்யப்படும்.
146.உலகத் தரத்திற்கு இணையான சென்னையை தலைமையிடமாகக் கொண்டு 200 உள்நாடு மற்றும் வெளிநாடு மென்பொருள் நிறுவனங்கள், தங்களது நிறுவனங்களை அமைத்திடவும், Global Capacity Centre-களை அமைத்திடவும் Satellite Software Park நிறுவப்படும். இதன் தொடர்ச்சியாக Satellite Park மற்ற மாவட்டங்களிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- உப்பு உற்பத்தித் தொழிலை மேம்படுத்தும் வண்ணம் ‘அம்மா உப்பு திட்டம்’ மீண்டும் கொண்டுவரப்படும்.
148, சென்னையிலும், தென் தமிழ் நாட்டில் திருநெல்வேலியில் வேலைவாய்ப்பை அதிகரிக்க மருந்துவப் பூங்கா (Pharmaceutical Park) அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்தபடி, கோவை, திருச்சி, சேலம், ஓசூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய, தமிழ் நாட்டில் இராணுவத் தளவாடங்கள் தொழில்வழி தடத்தில், இராணுவத் தளவாடங்கள் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
150.உள்நாட்டு, வெளிநாட்டு நிதி மற்றும் நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள்
தங்களின் சேவையை தமிழ் நாட்டில் இருந்து வழங்க சென்னைக்கு அருகில் 260 ஏக்கர் பரப்பளவில் “தொழில்நுட்ப நகர்” அமைக்கும் திட்டம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் மூலமாக வேலை வாய்ப்பு பெருகும்.
- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளை ஆய்வு செய்து, அவர்களின் பிரச்சனைகளுக்கு அரசு தீர்வு காண ஏதுவாக ஒரு குழு அமைக்கப்படும். அக்குழுவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கங்களின் பிரதிநிதிகளும் இடம்பெறுவர். இக்குழுவின் பரிந்துரைக்கேற்ப, நலிந்துள்ள நிறுவனங்களை மீட்டெடுப்பதைப் பற்றியும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட, பொது கட்டமைப்புகளை பகிர்ந்துகொள்ள உரிய வசதிகள் செய்வது பற்றியும், நிதி மேலாண்மை, உற்பத்தி ஆலோசனைகள் குறித்து உதவிகள் வழங்க, மாநில அளவில் அரசே ஆலோசனை நிறுவனங்களை அமர்த்தி உதவ வழிவகை செய்யப்படும்.
- கிராமப் புறங்களில் தொழில் வளர்ச்சியை ஊக்குவித்து, வேலைவாய்ப்பை உருவாக்க, படித்த இளைஞர்களும், விவசாய உற்பத்தி குழுக்கள்! நிறுவனங்கள் விவசாயம் சார்ந்த தொழில், உணவு பதப்படுத்தும் தொழில், கைவினை சார்ந்த தொழில் போன்ற தொழில்களைத் துவங்க சிறப்பு மானியங்கள் வழங்கப்படும்.
- சிறு, குறு தொழிலாளர்களுக்கு மின்சார வாரியத்தால் விதிக்கப்பட்ட நிலைக் கட்டணம் வரைமுறைபடுத்தப்படும். தொழிலுக்கான கட்டண விகிதம், தொழில் முனைவோர் பாதிக்காத வகையில் மாற்றியமைக்கப்படும்.
- தமிழ் நாட்டில் உள்ள சிறு, குறு தொழிற்சாலைகளின் மின் தேவைகளுக்கு சூரிய ஒளி மின்சாரத்தை தாங்களே தயாரித்து பயன்படுத்துவதை ஊக்குவிக்க கூடுதலாக மானியம் வழங்கப்படும்.
- கைவினைக் கலைஞர்களுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட சிறு வணிக வளாகம் மற்றும் திறன் மேம்பாட்டு வளாகங்கள் மாவட்டந்தோறும் உருவாக்கப்படும்.
- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் வளர்ச்சிக்காக, ஒப்பந்த வேலை மீதான (ஜாப் ஒர்க்ஸ்) GST வரிவிதிப்பை 5%-மாகக் குறைக்க மத்திய அரசை வலியுறுத்தப்படும்.
- காவிரி ஆற்றுப் பகுதிகளில் கழிவு நீர் கலக்காமல் இருக்கவும், மாசில்லாத நீர் கால்வாய் வழியாகச் செல்லவும் ‘நடந்தாய் வாழி காவேரி திட்டம்’ விரைந்து செயல்படுத்தப்படும்.
- வைகை, தாமிரபரணி போன்ற ஆறுகளில் கலக்கும் கழிவு நீரை தடுக்கவும். நீர் மேலாண்மையைப் பெருக்கவும் உரிய ஆய்வுகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
- Global Earth Warming புவி வெப்பமடைவதைத் தடுக்க, காடு வளர்ப்பு திட்டத்தின்கீழ் ஒவ்வொரு ஆண்டும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது பிறந்த நாளன்று, அவர்களின் நினைவாக, தலா ஒரு கோடி மரக் கன்றுகள் நடப்படும். இத்திட்டத்தின் மூலம் ஐந்து ஆண்டுகளில் 10 கோடி மரக் கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும். இதனால், தமிழ் நாடு சுற்றுச் சூழலுக்கு உகந்த மாநிலமாக உருவாக்கப்படும்.
- மின்சார வாகளங்களை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு, அனைத்து நகரப் பேருந்துகளும் மின்சார வாகனங்களாக மாற்றப்படும்.
- சாக்கடை கழிவுகளை அகற்ற ரோபோட்டிக் இயந்திரத்தை பயன்படுத்தும் தொழில்நுட்பம் புகுத்தப்படும்; அதற்கான அனைத்து பாதுகாப்பு கவசமும் வழங்கப்படும்.
- அனைத்து மாநகராட்சிகளிலும் நீர் மறுசுழற்சி, கழிவு நீர் சுத்திகரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இதன்மூலம் நன்னீர் விரயமாவதைத் தடுத்து, நீர் சுழற்சி முறை மூலம் நீர் ஆதாரம் பாதுகாக்கப்படும்.
- கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பின்னலாடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு சவாலாக இருந்துவரும் சாயப் பட்டறை கழிவுநீர் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
- மறுசுழற்சி பிளாஸ்டிக் கழிவுகளுக்கு GST 18%-மாசு உள்ளதை 5%-மாக குறைக்கவும், மேலும், அதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கும் 18%-மாக உள்ள GST-யை 5%-மாகக் குறைக்க மத்திய அரசை வலியுறுத்தப்படும்.
- சுற்றுச் சூழலுக்கு உகந்த பேப்பர் பைகள், கவர்கள் உற்பத்தி மூலப் பொருட்களுக்கான GST 18%-மாசு உள்ளதை 5%-மாகக் குறைக்க மத்திய அரசை வலியுறுத்தப்படும்.
- நகர்புறங்களில் உள்ள குப்பை கழிவுகளுக்கு நிரந்தரத் தீர்வாக, நவீன முறையைப் பயன்படுத்தி, குப்பைகளை அழிக்கவும், பொதுமக்களை நோய்த் தொற்றில் இருந்து காக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
- அதிக மக்கள் தொகை உள்ள கிராம ஊராட்சிகளில், குப்பைக் கழிவுகளை மறுசுழற்சி செய்யவும், கழிவு நீரை முறையாக கத்திகரித்து மறுசுழற்சி செய்து பயன்படுத்தவும், நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, அரசு சார்பில் தனி செயலி உருவாக்கப்படும்.
- இன்றைய டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஆயிரக்கணக்கில் பணிபுரியும் உணவுப் பொருள் டெலிவரி தொழிலாளர்கள், டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் ஆன்லைன் சேவை தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், ‘தற்காலிக ஒப்பந்த வேலை அல்லது செயலி அடிப்படையிலான தற்காலிக தொழிலாளர்களுக்கான நலத் திட்ட வாரியம்’ ஏற்படுத்தப்படும். அத்தகைய தொழிலாளர்களுக்கு நிலையான வருமானம், மருத்துவ பாதுகாப்பு, விபத்துக் காப்பீடு மற்றும் ஒய்வூதியம் போன்ற அடிப்படை சமூக பாதுகாப்பு வழங்கப்படும்.
- தற்போது கைகளால் செய்யப்படும் நாட்டு செங்கல் சூளை மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 80 யூனிட் மண் அளவை 150 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும்.
- தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மண்பாண்டத் தொழிலாளர்களுக்கும் தற்போது வழங்கப்பட்டு வரும் மழைக்கால நிவாரண நிதி உயர்த்தி வழங்கப்படும். விடுபட்டுள்ள மண்பாண்டத் தொழிலாளர்களை, வாரியத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- ஐந்தொழில் விஸ்வகர்மா சமுதாய மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு தச்சமா வேலை, கொள்ளு இரும்பு வேலை, கண்ணார் பாத்திர வேலை, சிற்ப வேலைப்பாடு மற்றும் தங்கம் சம்பந்தப்பட்ட பொற்கொல்லர் வேலை ஆகிய ஐந்து தொழில்களும் உள்ளடங்கிய தொழில் பூங்கா மாவட்ட அளவில் அமைத்துத் தரப்படும். மேலும், நகை மதிப்பீட்டாளர் பணிக்கு பயிற்சி பெறவும், நகை பரிசோதகராக வங்கிகளில் வேலை வாய்ப்பு பெறவும், இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்தொழில்களில் ஈடுபட்டோருக்கு கூட்டுறவு வங்கிகளில் மானியத்துடன் கூடிய கடன் உதவி, தமிழ் நாடு பொற்கொல்லர் நல வாரியம் மூலமாக அளிக்கப்படும்.
- பீடித் தொழிலாளர்கள் அமைப்பு சாரா வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு, வாரியத்தின் மூலமாக சலுகைகள் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
- தமிழ் நாட்டில் உள்ள அனைத்து உப்பளத் தொழிலாளர்களுக்கும் தற்போது வழங்கப்பட்டு வரும் மழைக்கால நிவாரண நிதி உயர்த்தி வழங்கப்படும்.
- வெள்ளி கொலுசு உட்பட பல்வகை ஆபரணங்கள் மற்றும் அணிகலன்கள் செய்யும் பொற்கொல்லர்கள் நலன் காக்க “வெள்ளி கொலுசு, ஆபரண தொழில் நல வாரியம்” அமைக்கப்படும்.
176, தமிழ் நாட்டின் மாநில மரமான, பனை மரங்களை வளர்ப்பது ஊக்குவிக்கப்படும். பனை உற்பத்தியாளர் சங்கங்கள் மூலமாக பனை பொருட்கள் மூலம் மதிப்புப் கூட்டு உற்பத்திப் பொருட்கள் தயாரிப்பது ஊக்குவிக்கப்படும். மேலும், அவைகளைச் சந்தைப்படுத்தி அத்தொழிலில் ஈடுபடுவோருக்கு நிரந்தா வருமானம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
- பனை உற்பத்தித் தொழிலாளர்கள் வாரியத்தில் பதிவு செய்துள்ள பனை தொழிலாளர்கள் ஆண்டுக்கு ஒருசில மாதங்கள் மட்டுமே பனை பொருள் உற்பத்தித் தொழிலில் ஈடுபடுவதை கருத்தில்கொண்டு, உப்பளத் தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள் போல், உற்பத்தி இல்லாத காலங்களில் வாழ்வாதார மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படும்.
- பனை உற்பத்தித் தொழிலாளர்கள் வாரியத்தில் பதிவு செய்துள்ள பனை தொழிலாளர்களுக்கு, பனை மரம் ஏறும் கருவி முதற்கொண்டு தேவைப்படும் உபகரணங்கள் விலையில்லாமல் வழங்கப்படும்.
- பனை உற்பத்தித் தொழிலாளர்கள் வாரியத்தில் பதிவு செய்துள்ள பனை தொழிலாளர்களுக்கு காப்பீடு வசதி ஏற்படுத்தித் தரப்படும். அவர்களுக்கு கல்வி, மருத்துவம், ஓய்வூதியம் போன்ற வாழ்வாதார உதவிகள் வழங்கப்படும்.
- முடிதிருத்தும் தொழிலாளர்கள் மற்றும் சலவைத் தொழிலாளர்களின், தொழில் பாதுகாப்பு மற்றும் வேலை வாய்ப்பு பாதுகாக்கப்படும். அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் அனைத்து சலுகைகளையும் இவர்கள் பெற்று பயனடைய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இவர்கள் எவ்வித இடர்பாடுமின்றி தொழில் செய்வதற்குத் தேவையான உதவிகள் செய்யப்படும்.
- சலவைத் தொழிலாளர்கள் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு சிறப்புத் திட்டத்தின்கீழ் வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- அனைத்து அமைப்பு சாரா வாகன ஓட்டுநர்களுக்கும் இலவச விபத்துக் காப்பீடுத் திட்டம் துவங்கப்படும்.
- அனைத்து அமைப்பு சாரா கூலித் தொழிலாளர்களுக்கும் வட்டியில்லா நுண்கடன் ரூ. 10,000 (Micro Loan) வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
- அனைத்து வியாபாரிகளையும் வணிகர் நல வாரியத்தில் பதிவு செய்து அவர்களின் நலனைக் காக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- தமிழகத்தில் ஏழ்மையிலும், வறுமையிலும் வாழும் போயர் மக்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும். நலவாரியத்தின் வாயிலாக அவர்களின் வாழ்வு மேம்பட சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
- யானை-மனித மோதலை தடுக்க, வனத்தை ஒட்டிய மாவட்டங்களில் உள்ள மலையடிவார கிராமங்களுக்கு காட்டு யானைகளால் உயிர்பலி, விவசாய நிலங்கள் பாதிப்பைத் தடுக்க வனத் துறைக்கு புதிய ஜீப் வானங்கள் மற்றும் டார்ச் லைட் உள்ளிட்ட உபகரணங்கள் போதிய அளவில் வழங்கப்படும்.
- வருங்காலங்களில் மின்சார வாகனங்கள் அதிகமாக பயன்பாட்டிற்கு வரும்பொழுது, இன்றைய மின் உற்பத்தியைவிட மிக அதிக அளவு மின் நுகர்வு ஏற்படும். கடந்த 5 ஆண்டுகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் உற்பத்தி திட்டங்களைத் தவிர, விடியா திமுக ஆட்சியில் எந்தவித புதிய திட்டங்களையும் தொடங்கவில்லை. சூரிய மின்சக்தி போன்ற மரபு சாரா எரிசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க வரும் முதலீட்டாளர்களும், தமிழ் நாட்டில் துறைகள்தோறும் நீக்கமற நிறைந்துள்ள லஞ்ச லாவண்யங்களால் ஆர்வம் காட்டாமல், வேறு மாநிலங்களுக்குச் சென்று முதலீடு செய்கின்றனர். இந்த நிலையை மாற்றி, நேர்மையான வெளிப்படைத் தன்மையோடு சூரிய சக்தி போன்ற மரபு சாரா எரிசக்தி உற்பத்தி செய்ய அனுமதிகள் வழங்குவதோடு, அதன்மூலமாக மின் உற்பத்தி பெரிய அளவில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர, புனல் நீர், அனல் மின் நிலையம் போன்ற புதிய மின் உற்பத்தி நிலையங்களைத் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
- அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் வசிப்போருக்கு பொது பயன்பாட்டு फीमाएक न Commen Usage Charge (Tariff 1D) சீரமைக்கப்படும்.
189 வீடுகளுக்கு, மேற்கூரை சூரிய மின்சக்தி உற்பத்திக்கு சோலார் பேனல் அமைக்க, 1 கிலோ வாட்டிற்கு ரூ. 30,000/- மற்றும் 2 கிலோ வாட்டிற்கு ரூ. 60,000/- மானியம் வழங்கப்படும்.
190, தொலைத் தொடர்பு வசதிகளை மேம்படுத்த தமிழ் நாட்டில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் சுற்றுலா மையங்களில், அனைவரும் பயன்பெறும் வகையில் இலவச WIFI வசதி ஏற்படுத்தித் தரப்படும்.
- தூத்துக்குடி விமான நிலையம் தரம் உயர்த்தப்பட்டு இரவு நேர விமான சேவை தொடங்கவும், சரக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தவும் மத்திய அரசை வலியுறுத்தப்படும்.
- நாகப்பட்டினம் தூத்துக்குடி-கன்னியாகுமரி நான்குவழி சாலைத் திட்டம் விரைவாக செயல்படுத்தப்படும்.
193, தமிழ் நாட்டிற்கு மத்திய அரசால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களை துரிதப்படுத்தவும். தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், தூத்துக்குடி, சென்னை துறைமுக விரிவாக்கத் திட்டங்கள், சென்னையில் இருந்து அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய வெளி நாடுகளுக்கு நேரடி விமானப் போக்குவரத்து. டில்லியில் இருந்து சென்னை வழியாக தூத்துக்குடி வரையிலான சரக்கு வழித் தடம் (Dedicated Fright Corridar) போன்ற திட்டங்களை விரைவாக செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
- குளச்சல் துறைமுகம் மேம்படுத்தப்பட்டு, சரக்குப் பெட்டக இணைய வசதி ஏற்படுத்த மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
- அனைத்து மாநகராட்சிகளிலும் போக்குவரத்து நெரிசலை தவிற்க சுற்றுச் சாலைகள் (Ring Roads) அமைக்கப்படும்.
- சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம் விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
- சென்னை வெள்ள தடுப்புப் பணிகள் முழுமையாகவும், முறையாகவும் நிறைவேற்றப்படும்.
- சென்னை உள்ளிட்ட முக்கிய மாநகரப் பகுதிகளில் வாகன நிறுத்த தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் ‘பன்னடுக்கு வாகன நிறுத்த வளாகங்கள் கூடுதலாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- மத்திய அரசின் உதவியுடன் கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளை விரைவுபடுத்தி செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
- கோவை மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டங்கள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
- கோவை-பாலக்காடு சாலை, மதுக்கரை-மேட்டுப்பாளையம் சாலை, நரசிம்மநாயக்கன்பாளையம் வரையிலான மேற்கு புறவழிச் சாலை திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
- கோவை-பாலக்காடு சாலை, மதுக்கரை, செட்டிபாளையம் பிரிவு முதல் அவிநாசி சாலையில் நீலாம்பூர் சந்திப்பு வரையிலான L&T பைபாஸ் நான்கு வழிச் சாலையை ஆறு வழிச் சாலையாக மாற்றம் செய்யப்படும்.
- அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த உயர்மட்ட மேம்பாலத்தினை அவிநாசி சாலையில் சின்னியம்பாளையம் முதல் நீலாம்பூர் L&T பைபாஸ் சாலை சந்திப்பு வரை நீட்டிப்பு செய்து புதிய மேம்பாலம் அமைத்துத் தரப்படும்.
- கோவையில் உள்ள திருச்சி செல்லும் சாலையில் இராமநாதபுரம் உயர்மட்ட மேம்பாலம் அருகிலிருந்து சிங்காநல்லூர் சந்திப்பு-ஒண்டிப்புதூர் மேம்பாலம் வரை புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்.
சாலை, L&T பைபாஸ் சாலை சந்திப்பில் 205. கோவை-பொள்ளாச்சி (கற்பகம் கல்லூரி அருகில்) ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்.
- தடாகம் சாலை, லாலி ரோடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்.
- கோவை-திருச்சி சாலை, செயிண்ட் மேரிஸ் பள்ளி அருகில் இருந்து துவங்கி லங்கா கார்னர்-இரயில் நிலைய சாலையில் காவல் ஆணையாளர் அலுவலகம் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்.
- சர்வதேச அணிகள் பங்குபெறும் வகையில் புதிய கிரிக்கெட் மைதானம் கோவையில் அமைக்கப்படும்.
- கோவை மாநகராட்சி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் (வெள்ளலூர்) கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
- சிறுவாணி அணையை தூர்வாரி சீரமைக்கும் திட்டத்தை கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மத்திய அரசின் உதவியுடன் நிறைவேற்றப்படும்.
- கோவையில் அகல இரயில் பாதை பணிகள் முடிவடைந்த நிலையில் இவ்வழித் தடத்தில் இயங்கி வந்த இரயில் சேவை மீண்டும் துவக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- தமிழ் நாட்டில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடங்களிலும், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வந்து செல்லும் இடங்களிலும் சுற்றுலா வசதிகள் மேம்படுத்தப்பட்டு, அப்பகுதிகளில் உள்ள படித்த இளைஞர்கள்/மகளிருக்கு பயிற்சி அளித்து, வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். அதேபோல், புகழ்பெற்ற திருக்கோயில்களை இணைத்து ஆன்மீக சுற்றுலாப் பாதைகள் அமைக்கப்பட்டு அதற்கான வசதிகள் மேம்படுத்தப்படும்.
- சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை கடல் சார்ந்த கடற்கரை பகுதிகள் சுற்றுலா வளர்ச்சி திட்டத்தின்கீழ் பத்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டு கடல்சார் விளையாட்டு மையம் ஏற்படுத்தி படகு சவாரி, , Scuba Diving, Water Polo, Free Diving us விளையாட்டுகள் சர்வதேச அளவிலான பிரபல நிறுவனங்களின் பங்களிப்புடன் World Class Water Theme Park அமைக்கப்படும். இதன்மூலம் அந்தந்த பகுதியில் உள்ள மக்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் 50,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதோடு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருவதால் அந்நிய செலாவணி பெருமளவில் ஈட்டப்படும். மேலும், சென்னையில் பல்வேறு இடங்களில் International Food Street, மெரினாவில் (Fisherman Food Street) மீன் உணவங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
214, சென்னை மற்றும் இராமேஸ்வரம்-தனுஷ்கோடி ஆகிய இடங்களில் உலகத் தரத்தில் கடல் சுற்றுலா வசதிகள் ஏற்படுத்தப்படும்.
- 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மட்டுமே முடித்துவிட்டு சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்பும் இனைஞர்களுக்கு திறன்சார் பயிற்சி வழங்கி, எவ்விதப் பிணையும் இல்லாமல் ரூ. 25 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படும்.
- தமிழ் நாட்டில் இயங்கும் அனைத்துத் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் குறைந்தபட்சம் 75 சதவீத வேலைவாய்ப்புகள் தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்ற சட்டம் இயற்றப்படும்.
- அரசு அலுவலகங்களில் உள்ள லட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் TNPSC மூலம் நிரப்பப்பட்டு, படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.
- மலைவாழ் பகுதிகளில் வசிக்கும் இளைஞர்கள் சுயதொழில் தொடங்கி, அவர்களின் வாழ்வு மேம்பட அதிகபட்சம் ரூ. 10 லட்சம் கடன் பெற வழிவகை செய்வதுடன், அதில் 50% மானியம் வழங்கப்படும்.
- நகர்புறங்களில், குறிப்பாக ஏழைகள் வாழும் பகுதிகளில் உள்ள மகளிர் மற்றும் இளைஞர்கள் உரிய வேலை வாய்ப்பை பெறுவதற்கு, ஓட்டுநர் பயிற்சி, எலக்ட்ரிக்கல், பிளம்பிங், தையல் போன்ற பணிகளை மேற்கொள்ள பயிற்சியும், பெண்களுக்கு வீட்டு வேலைகள், சமையல் முதியோர் மற்றும் குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் (Mid Wives) மருத்துவ தாதிகள், செவிலியர்கள், தையல் போன்றவற்றில் பயிற்சிகள் வழங்கி, அவர்களை ஒருங்கிணைத்து வேலை வாய்ப்புகள் பெறும் வகையில் செயலி ஒன்று உருவாக்கப்பட்டு, அவர்கள் பணி, சம்பளம் முதலியவை உறுதிசெய்யப்பட்டு வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும். இதற்கென தனி அமைப்பு ஏற்படுத்தப்படும்.
- படித்த இளைஞர்களின் திறன் வளர்ப்புக்கென (Skill Development) தனி பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டு புதிய தொழில்நுட்பத்துடன் ஆன்லைன் (Online) திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும்.
- UPSC, NEET, IT-JEE, TNPSC, Railways, Banks தேர்வுகளில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் வெற்றி பெறுவதை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட நூலகங்கள் நவீனப்படுத்தப்பட்டு, நூலகங்களிலேயே போட்டித் தேர்வுகளுக்கு இளைஞர்களை தயார்படுத்த உரிய வசதிகளுடன் உயர்தர பயிற்சி மையம் அமைக்கப்படும்.
- இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுவது சீரமைக்கப்பட்டு, கல்வி பயிலும் காலத்திலேயே திறன் வளர்ப்பதற்கும், படிப்பு முடிந்தபிறகு திறன் பயிற்சி பெற்று வேலை வாய்ப்பு பெறுவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெறுவதை உறுதி செய்ய அவர்களுக்கு மொழியறிவு, ஆளுமை பண்புகளுக்கான பயிற்சி, திறன் மேம்பாடு, மின்திறன் பயிற்சி போன்றவை அயலக வேலை வாய்ப்பு மனிதவள நிறுவனம் (Overseas Manpower Development Corporation) மூலமாக இலவச பயிற்சி வழங்கப்பட்டு, அவர்கள் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
- அம்மா உணவகம் மீண்டும் சிறப்பு பொலிவுடன் இயக்கப்படும். மாநகராட்சி, நகராட்சி பகுதிகள் மற்றும் அரசு மருத்துவமனை வளாகங்களில் தேவைக்கேற்ப அம்மா உணவகங்கள் திறக்கப்படும்.
- ஏழை-எளிய மக்கள் வீடு கட்டுவதற்கு தேவையான சிமெண்ட், கம்பி, செங்கல், மணல், M-Sand, ஜல்லி, கிராவல் ஆகிய கட்டுமானப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கட்டுப்பாடின்றி உயரும்போது, நுகர்வோர் பாதிக்கப்படாமல் இருக்க, அத்தகைய பொருட்களை வாங்கி நியாய விலையில் விற்பதற்கு ‘விலை கட்டுப்பாட்டு நிதியம்’ அம்மா அவர்களின் அரசால் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிதியத்திற்கான தொகை தேவைக்கேற்ப அதிகரிக்கப்பட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும்போது, பொருட்களை வாங்கி நியாய விலையில் மக்களுக்கு வழங்கி, விலையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
- கூட்டுறவு விற்பனை சங்கங்கள், கூட்டுறவு நுகர்வோர் சங்கங்கள் போன்றவை வலுப்படுத்தப்பட்டு, முக்கிய நகரங்களில் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கூட்டுறவு அங்காடிகள் அதிக அளவில் திறக்கப்பட்டு, ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு நியாய விலையில் பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
- மாவட்டந்தோறும் முதியோர் இல்லங்கள் அமைக்கப்படும். தனியார் மற்றும் சமூக பங்களிப்பு திட்ட நிதியில், தொழில் நிறுவனங்கள் முதியோர் இல்லங்களை அமைக்க ஊக்குவிக்கப்படும்.
- சமுதாயத்தின் ஓர் அங்கமாகத் திகழும் திருநங்கைகள் தாழ்வு மனப்பான்மை இல்லாமல் சுயமரியாதையோடு சமுதாயத்தில் வாழவும், அவர்களுக்கு குடியிருக்க வீடு, தொழில் செய்து கய சம்பாத்தியத்தோடு சொந்தக் காலில் வாழும் வாழ்க்கை ஆகியவற்றுக்கு அடித்தளமான தொழில் செய்ய மானியத்துடன் கூடிய எளிய கடன் வசதி செய்து கொடுத்து, அவர்களின் வாழ்க்கையை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். மேலும், திருநங்கைகள் நலன் கருதி 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும்.
- கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் கடன் தொகையை குறைந்தபட்சம் ரூ. 1,00,000/-த்தில் இருந்து ரூ 2,00,000/-மாக உயர்த்தி, 50% மானியத்துடன் வழங்கிட வழிவகை செய்யப்படும்.
- மாற்றுத் திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீட்டின்கீழ் இந்து சமய அறநிலைத் துறை சார்ந்த கடைகளை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
- பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை, கடுமையாக பாதிப்படைந்தவர்கள் பட்டியலில் இணைத்து, பராமரிப்பு உதவித் தொகை உயர்த்தி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்.
- ஒரு கண் பாதிப்புக்கு உள்ளானவர்களை குறைந்த பார்வை உடையவர்களுக்கான பட்டியலில் சேர்த்து மாற்றுத் திறனாளி அடையாள அட்டை மற்றும் அரசு நலத் திட்ட உதவிகள் பெற வழிவகை செய்யப்படும்.
- ஆட்டிசம் போன்ற பாதிப்புக்குள்ளான அறிவுசார் வளர்ச்சிக் குறைபாடு உடைய குழந்தைகளுக்காக அரசு சிறப்பு பள்ளிகள் உருவாக்கப்படும்.
- தாட்கோ மூலம் ஆதிதிராவிடருக்கு வழங்கப்பட்ட பொருளாதார மேம்பாட்டுக்கான கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
- ஆதி திராவிடர்களுக்கான கோவில் புதியதாக கட்டுவதற்கு வழங்கப்படும் தொகையை ரூ. 250 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
- பட்டியலின மக்கள், விருப்பத்தின்பேரில் கிறிஸ்துவத்திற்கு மாறும்போது, ஏற்கெனவே அவர்கள் பெற்று வந்த உரிமைகள், சலுகைகள் மறுக்கப்படாமல் வழங்கும் வகையில் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, அவர்களின் உரிமைகளும், சலுகைகளும் தொடர நடவடிக்கை எடுக்கப்படும்.
- ஆதிதிராவிடர்/பழங்குடியினர் பகுதிகளில் உள்ள மயானங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுத்து சுற்றுச் சுவர் அமைக்கப்படும். மயானம் இல்லாத பகுதிகளுக்கு புதிய மயானம் ஏற்படுத்தித் தரப்படும்.
- ரயில்வே துறையில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வந்த Senior Citizen மற்றும் பத்திரிகையாளர்களுக்கு இருந்து வந்த 50% Fare Concession மீண்டும் வழங்க வலியுறுத்தப்படும்.
- முதியோர் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு ஏதுவாக, தனியாக வசிக்கும் முதியோர் வீடுகளில், காவலர்கள் வந்து செல்லும் பட்ட புத்தகங்கள் பராமரிக்கப்படும்.
- நகர்புறங்களில் நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு நியாயமான வாடகையில் வீடு கிடைப்பதில் உள்ள சிரமங்களை கருத்தில்கொண்டு சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற பெருநகரங்களில் அரசு தனியாகவோ அல்லது தனியாருடன் கூட்டமைத்து, அடுக்கு மாடி வீடுகள் சுட்டி நியாயமான வாடகையில் அத்தகைய குடும்பங்களுக்கு வாடகை வீடுகள் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
- கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தின் வாயிலாக பெற்ற, பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் வீட்டு அடமானக் கடனுக்கான அபராத வட்டி, மாதாந்திர தவனை முறை (EMI) வட்டி ஆகியவற்றை தள்ளுபடி செய்து, One time Settlement என்ற அடிப்படையில் கணக்கிட்டு வசூல் செய்து அடமானப் பத்திரங்களை திருப்பித் தர வழிவகை காணப்படும்.
- குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளில், 1985-ஆம் ஆண்டிலிருந்து எண். 804/93-ன்படி வழங்கப்பட வேண்டிய நிலுவையில் உள்ள கிரயப் பத்திரங்களை உரியவர்களுக்கே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, குடியிருப்பவர்களின் உரிமை உறுதி செய்யப்படும். குடியிருந்து வருபவர்களுக்கு, அரசாணை 244 பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் தற்போது விடியா திமுக அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் உட்பட அனைத்து சங்கங்களின் கோரிக்கைகளையும் பரிசீலித்து, தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ஓய்வூதியத் திட்டம் சீரமைக்கப்படும்.
245, அரகத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அலுவலக உதவியாளர்கள் போன்ற பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் தொகுப்பு ஊதியம் உயர்த்தி வழங்கப்படும்.
- அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குடிமைப் பணியாளர்கள் கூட்டு மன்றக் கூட்டம் ஆண்டுக்கு 2 முறை நடத்தப்பட்டு, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு அவ்வப்போது தீர்வு காணப்படும்.
- மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஊதியக் குழு ஊதிய விகிதத்தை அமல்படுத்தியவுடன், காலதாமதமின்றி 8-வது மாநில ஊதியக் குழு அமைக்கப்பட்டு ஊதிய உயர்வு வழங்கப்படும்.
248, சத்துணவு பணியாளர்கள், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், 1098 (மிசன் வாத்சல்யா) பணியாளர்கள் குழந்தைகள் காப்பக இதுபோன்ற அனைத்துப் பணியாளர்களுக்கும் அரசு காலிப் பணியிடங்களில் முன்னுரிமை வழங்கப்படும்.
- சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், நியாய விலைக் கடை ஊழியர்கள் மற்றும் ஒய்வூதியம் பெறாத அரசுப் பணியாளர்களும் பயன்பெறும் வகையில் புதிய சிறப்பு ஓய்வூதியத் திட்டம் உருவாக்கப்படும்.
- சமூகநலத் துறையின்கீழ் பணியாற்றிக் கொண்டிருக்கும் சத்துணவு ஊழியர்கள், உதவியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், உள்ளிட்ட பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- ஊராட்சி செயலாளர்கள் மற்றும் கிராம உதவியாளர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் ஊதியம் முறைப்படுத்தப்படும்.
252 மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு உறுதி செய்வதுடன், அவர்களது ஊதியம் உயர்த்தி வழங்கப்படும்.
- தமிழ் நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்களுக்கு. பொது காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு திட்டத்தின்கீழ் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
254, காவல் துறையில் பணிபுரியும் காவலர்களுக்கு சுழற்சி முறையில் வாரம் ஒருநாள் விடுப்பு வழங்கப்படும்.
- தற்போது வழங்கப்படும் சலவைப் படி ரூ. 500-ல் இருந்து ரூ. 1,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- சென்னை போன்ற பெருநகரங்களில், காவலர்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 300 உணவுப் படியாக வழங்கப்படுகிறது. ஞாயிற்றுக் கிழமை நீங்கலாக மற்ற மாவட்டங்கள் மற்றும் மாநகரங்களில் ரூ. 200 உணவுப்படியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- எங்களது ஆட்சியில், சென்னை எழும்பூரில் காவலர் நல மருத்துவமனை மருத்துவமனை இதுபோன்ற காவலர் நல அமைக்கப்பட்டது. மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், வேலூர் போன்ற பெருநகரங்களிலும் ஏற்படுத்தப்படும்.
- தமிழ் நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படும். தமிழ் நாட்டில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க, முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் சிறப்பு அதிரடிப் படை (Anti Drug Task Force) அமைக்கப்படும். மேலும், போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். மேலும் பாலியல் குற்றச் செயல்கள், கொலை, கொள்ளை, கூலிப் படைகள் இரும்புக் கரம் கொண்டு முற்றிலும் ஒழிக்கப்படும்.
259, அதிக குடியிருப்புகள் கொண்டுள்ள காவலர் குடியிருப்புகளில், மருத்துவ உதவி மையம் (Meidcal Help Desk) ஏற்படுத்தப்படும்.
- காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டால், அதற்கான முழு செலவையும் அரசே ஏற்றுக்கொள்ளும் வகையில் சிறப்பு காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
- காவலர் மற்றும் பொதுமக்கள் நல்லுறவு பேணுவதற்காக, காவலர் பொதுமக்கள் அமைப்பு (Poilce Pubile Association) காவல் துணை கண்காணிப்பாளர் அல்லது காவல் உதவி ஆணையாளர் தலைமையில் அமைக்கப்படும்.
- தற்போது வழங்கப்பட்டு வரும் காவலர்களுக்கான சீருடைப்படி 6,000/- ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
- ஊர்க் காவல் படையினருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் குறைந்த வேலை நாட்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- மாநில அளவில் மட்டுமின்றி, தாலுகா அளவில் உழைக்கும் உள்ளூர் பத்திரிகையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட இணையதள நிருபர்களுக்கும், அரசு அங்கீகார அட்டை, மருத்துவக் காப்பீடு மற்றும் ஓய்வூதியம் பாரபட்சமின்றி வழங்கப்படும்.
265, சொந்தமாக வீடு கட்ட விரும்பும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகாரம் இல்லாத (ஆனால் நீண்ட காலமாகப் பணியாற்றும்) உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கும் கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ. 10 லட்சம் வரை முழுமையான வட்டியில்லா வீட்டுக் கடன் வழங்கப்படும்.
- பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் வருமான உச்சவரம்பு நீக்கப்படும்.
- தமிழ் நாட்டின் முக்கிய நகரங்களில், பத்திரிகையாளர்கள் வீடுகட்டிக் கொள்வதற்கு குடியிருப்பு மனைகள் வழங்கப்படும்.
- தற்போது பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம், இனி காட்சி ஊடகவியளர்களுக்கும் வழங்கப்படும்.
- நெசவுத் தொழிலையே வாழ்வாதாரமாகக் கொண்டு வயது மூப்பின் காரணமாக தொழிலை தொடர்ந்து செய்ய முடியாமல் இருக்கும் 65 வயதுக்கு மேற்பட்ட நெசவாளர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் 1,000 ரூபாயில் இருந்து 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
- ‘பங்கர் பீமா யோஜனா’ கைத்தறி நெசவாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தில், 59 வயதுக்குள் மரணமடையும் நெசவாளர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த ரூ. 2,00,000 மீண்டும் தொடர்வதற்கும், அத்தொகையை ரூ. 3,00,000/-ஆக உயர்த்தி வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- விசைத்தறி நெசவாளர் சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் அதிகப்படியாக கொள்முதல் செய்து விற்பனை செய்வதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகள் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- பருவகால மாற்றத்தால், தொடர்ந்து நூல் விலை உயர்வை ஜவுளித் துறை சந்தித்து வருகிறது. இதனால், தமிழ் நாடு பஞ்சு கொள்முதல் கழகம் ஏற்படுத்தப்பட்டு தேவையான பஞ்சினை, பஞ்சு உற்பத்தி காலத்திலேயே கொள்முதல் செய்து இருப்பு வைப்பதன் மூலம், நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும்.
- நெசவாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு எந்தவித இழப்பும் ஏற்படாத வகையில், பருத்தியை இந்திய பருத்திக் கழகம் (CC) மூலம் கொள்முதல் செய்து, குறைந்த விலைக்கு நெசவாளர்களுக்கு பருத்தி நூல் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
- தமிழக அரசு வழங்கும் விலையில்லா வேட்டி, சேலை மற்றும் பள்ளி சீருடைகள் முழுக்க முழுக்க தமிழ் நாட்டிலேயே நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக உற்பத்தி செய்து, அதை கொள்முதல் செய்து பயனாளிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
- நெசவுத் தொழிலாளர்களுக்கான காப்பீட்டுத் திட்ட பிரீமியம் தொகையை அரசே ஏற்கும்.
- நூற்பு, நெசவு-விசைத்தறி, பின்னல் மற்றும் பதப்படுத்துதல் பிரிவுகள் பயன்பெறும் வகையில், இத்துறையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் நெசவுக் கூடத்தோடு சேர்ந்த பசுமை வீடுகள் கட்டித் தரப்படும்.
- கைத்தறி நெசவாளர்கள் நெய்யும் சேலைகளுக்கு, சேலை மதிப்பீட்டில் ரிவார்டு வழங்கப்படும்.
279, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆதரவற்று மற்றும் தெருவில் சுற்றித் திரியும் வாயில்லா ஜீவன்களை (நாய்கள், மாடுகள்) மீட்டுப் பராமரிக்க, உலகத் தரத்தில் அரசு விலங்குகள் காப்பகம் மற்றும் மருத்துவமனைகள் அமைக்கப்படும். விலங்குகளை வதை செய்வதற்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்படும்.
- தமிழ் நாடு முழுவதும் தெரு நாய்களால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும். மேலும், தெரு நாய்களின் இனப் பெருக்கத்தை கட்டுப்படுத்த சிறப்பு கருத்தடைத் திட்டம் செயல்படுத்தப்படும்.
- கொத்தடிமைகளைக் கண்டறிதல், மீட்பு மற்றும் மறுவாழ்வு சட்ட உதவி போன்ற, இவை சார்ந்த தரவு தளம் உருவாக்குதல் மற்றும் அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, தமிழ் நாட்டை கொத்தடிமை தொழில் முறை இல்லா மாநிலமாக உருவாக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
- ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ளும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அவர்களின் பயண செலவுத் தொகையும் உயர்த்தி வழங்கப்படும்.
- இஸ்லாமியர்களின் புனிதப் LILLHARIT LOIT 6BT ஹஜ் பயணத்திற்கு, பயனாளிகளின் பயணச் செலவிற்கு கூடுதல் தொகை வழங்கப்படும். மேலும், “உம்ரா” (மெக்கா-மதினா) பயணத்திற்கு கூடுதல் மானியம் வழங்கப்படும். எண்ணிக்கை உயர்த்தப்பட்டு, அவர்களின்
- கிறிஸ்தவர்கள் கல்லறைத் தோட்டம் மற்றும் இஸ்லாமியர்களுக்கு கப்ரிஸ்தான் அமைக்க இடவசதி அமைத்துத் தரப்படும்.
- புரட்சித் தலைவி அம்மா அவர்களின் கனவான, கச்சத் தீவை மீட்டெடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
- பூசாரிகள் குடும்பநல நிதி பாகுபாடின்றி வழங்க வழிவகை செய்யப்படும். மேலும், பூசாரிகள் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும்.
- சலங்கையாட்டம், வள்ளி கும்மி, பறையாட்டம், பம்பை ஆட்டம், கரகாட்டம் போன்ற பாரம்பரிய கிராமியக் கலைகள் அரசு சார்பில் ஆவணப்படுத்தி ஊக்கப்படுத்தப்படும்.
- மண்டலந்தோறும் உலகத் தரத்தில் விளையாட்டுப் பயிற்சி மற்றும் விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும். மேலும், ஊராட்சிப் பகுதிகளில் இளைஞர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் விலையில்லா விளையாட்டு உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- உச்சநீதிமன்ற வலியுறுத்தப்படும். கிளையை சென்னையில் விரைந்து அமைக்க
- இந்தியாவில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு “இரட்டைக் குடியுரிமை” (Dual Citizenship) வழங்கிட மத்திய அரசை வலியுறுத்துவோம்.
- இந்து ஆன்மீக பயணம் மேற்கொள்வோருக்கு, கயிலை மலை மானசரோவர், நேபாள நாட்டின் – முக்திநாத், ஹரித்துவார், ஜம்மு-காத்ரா வைஷ்ணவ தேவி திருக்கோயில் ஆகிய ஆலயங்களுக்கு ஆன்மீகப் பயணம் சென்றுவர பயணச் சலுகைக் கட்டணம் உயர்த்தி வழங்கப்படும்.
- திருக்கோயில்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அன்னதான திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்படும்.
293, மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் ஆட்சியில், ஏற்கெனவே சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம் அமைக்கப்பட்டதன் அடிப்படையில், சாதிவாரி கணக்கெடுப்பு பணியினை விரைந்து செய்திட மத்திய அரசை வலியுறுத்தப்படும்.
- நெய்வேலி NLC-க்கு நிலம் வழங்கியதற்காக, RR Policy மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றக் கொள்கை அமல்படுத்த சிறப்புக் குழு அமைக்கப்படும்.
- தமிழ் நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்து ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் EPS-95 ஓய்வூதியத் திட்டத்தில் குறைவாக ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு, கேரளா மற்றும் புதுச்சேரியில் பின்பற்றப்படும் நடைமுறையின் அடிப்படையில், குறைந்தபட்சம் மாதா மாதம் கணிசமான ஓய்வூதியம் பெறுவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
- முன்னாள் படைவீரர்களுடைய பிள்ளைகள், கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப் படிப்பில் சேர்வதற்கு, 1 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும்.
- இராணுவத்தில் உயிர் நீத்த மற்றும் ஊனமுற்ற படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு, கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.