புளியங்குடி: கொலை வழக்கில் ரவுடிக்கு 10 ஆண்டு சிறை
1 min read
Puliyangudi: Rowdy gets 10 years in prison in murder case
24.3.2026
தென்காசி மாவட்டம் புளியங்குடி புதுமனை 1-வது தெருவை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் பாலகிருஷ்ணன் (வயது 29/22)
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த காலடி தெருவில வசித்து வரும் பிரபல ரவுடி கணேசன் (எ) நந்து (வயது 28/26) இவருக்கும், பாலகிருஷ்ணன் இடையே குடும்ப முன் விரதம் இருந்து வந்தது. இதன் காரணமாக ரவுடி கணேசன் (எ) நந்து கடந்த 16.05.22 ஆம் தேதி இரவு எட்டு முப்பது மணி அளவில் புளியங்குடி காலாடி தெருவில் உள்ள கணேசன் அரிசி மாவு மில் முன்பு வைத்து கல்லைக் கொண்டு எறிந்தும் அடித்தும் பாலகிருஷ்ணனை கொலை செய்தார்.
இது பற்றி புளியங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசன் என்ற நந்துவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தென்காசி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி
எஸ். மனோஜ் குமார் முன்னிலையில் நடைபெற்றது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் குற்றவாளி பிரபல ரவுடி கணேசன் என்ற நந்துவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 1000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர்
சு.வேலுச்சாமி ஆஜராகி வாதாடினார்