வாசுதேவநல்லூர் கல்லூரியில் முதல் முறை வாக்காளர்கள் விழிப்புணர்வு தினம்
1 min read
First ever Voters Awareness Day at Vasudevanallur College
25/3/2026
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் வியாசா மகளிர் கல்லூரியில் நேற்று (25.03.2026) நடைபெறவுள்ள 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு முதல்முறை வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மாபெரும் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி மகளிர் திட்ட இயக்குநர் அபிதா ஹனிப் தலைமையில் நடைபெற்றது.
ஜனநாயகத்தின் கடமையான 100% வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக, முதல்முறை வாக்காளர்களுக்கு கல்லூரி மாணவியர் அனைவரும் ஒன்றிணைந்து 100% Vote” மற்றும் GETNLA 2026′ ஆகிய வார்த்தைகளின் வடிவத்தில் பிரம்மாண்டமாக அணிவகுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, முதல்முறை வாக்காளர்கள் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் தவறாமல் வாக்களிப்பதற்கான ‘வாக்காளர் உறுதிமொழியினை மகளிர் திட்ட இயக்குநர் அவர்கள் தலைமையில் அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்.
இந்நிகழ்வில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் முனைவர்.அலெக்ஸ், காவல் உதவி ஆய்வாளர் ரத்தினபால் சாந்தி, உதவி இயக்குநர் (மகளிர் திட்டம்: கமகாலிங்கம், இளம் வல்லுநர் அகத்தியர் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.