தமிழக சட்டமன்ற தேர்தலில் மார்ச்31, ஏப்ரல்-1, 3, 5ஆகிய தேதிகளில் மனுதாக்கல் செய்ய முடியாது
1 min read
Petitions cannot be filed for the Tamil Nadu Assembly elections on March 31, April 1, 3, and 5.
25.3.2026
2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான அறிவிக்கை படி 30.03.2026(திங்கட்கிழமை)
முதல் 06.04.2026 (திங்கட்கிழமை)
வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
1881ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின்கீழ், பொது விடுமுறையாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 31.03.2026 (செவ்வாய்க்கிழமை). 01.04.2026 (புதன்கிழமை). 03.04.2026 (வெள்ளிக்கிழமை) மற்றும் 05.04.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய இயலாது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் 06.04.2026 (திங்கட்கிழமை) ஆகும்.
எனவே மார்ச் 30, ஏப்ரல் 2, 4, 6 தேதிகளில் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். இந்த தகவலை தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தென்காசி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.