தென்காசியில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும்
1 min read
The election control room in Tenkasi will operate 24 hours a day
26.3.2026
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 23022026 முதல் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு கட்டணமில்லா தொடர்பு எண் 04633 1950 மூலம் 24 மணி நேரமும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான வாக்காளர் பட்டியல் தொடர்பான விவரங்கள் மற்றும் தேர்தல் தொடர்பான தகவல்களைப் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கென (People with hearing impairment) தனியாக கட்டுப்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் சைகை மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எனவே செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள இம்மையத்திற்கு நேரில் வந்து தங்களுக்கு தேவையான வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடி விவரங்கள் மற்றும் இதர தேர்தல் தொடர்பான விவரங்களை சைகை மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம். மேலும் மேற்படி கட்டுப்பாட்டு அறைக்கென தனியாக தொடர்பு எண் 9944064485 ஏற்படுத்தப்பட்டுள்ளது. நேரில் வர இயலாத வாக்காளர்கள் மேற்படி கைபேசி எண்ணில் Whatsapp Video Call மூலம் சைகை மொழிபெயர்ப்பு ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டு வேண்டிய தகவல்களை கேட்டு பெறலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். தெரிவித்துள்ளார்.