குத்துக்கல்வலசையில் மக்கள் ஒற்றுமை விழா
1 min read
People’s Unity Festival at Kuthukkalwalasai
26.3.2026
தென்காசி அருகே குத்துக்கல் வலசை ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகர் – வர்த்தக நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் குத்துக்கல் வலசையில் மக்கள் ஒற்றுமை விழா சிறப்பாக நடைபெற்றது
இந்த நிகழ்ச்சிக்கு குடியிருப்போர் நல சங்கத்தின் செயலாளர் ஆர். பொன்ராஜ் மற்றும் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
குத்துக்கல் வலசை ஆக்ஸ்போர்டு கல்வி குழுமத்தின் சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான
க.திருமலை மற்றும் பள்ளி தாளாளர் அன்பரசி திருமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்வில் குத்துக்கல்வலசை பஞ்சாயத்து தலைவர் செ.சத்யராஜ் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் ஆர்.எம். அழகு சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் .சிறப்பு அழைப்பாளராக தென்காசி மாவட்ட உதவி ஆட்சியர் கல்யாண சுந்தரம் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மனச்சாட்சி, ராஜேந்திரன், தயாளன், செய்யது அலி, பாத்திமா, ரமேஷ், மாரி, திருமலை, கொழுந்து, உத்தமன், தீபக்குமார், அரவிந்த், மாயக்கண்ணன், ஸ்ரீதர், விமல், சாய்ராம், குமரேசன், பாலமுருகன், ராம், முகமது அபு உள்ளிட்ட பலர் சிறப்பாக செய்திருந்தனர்.
இந்த நிகழ்வில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சி மக்களிடையே ஒற்றுமையையும் சமூக ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.