ஆலங்குளம் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் வெற்றிபெறுவாரா?
1 min read
Will AIADMK candidate K.R.P. Prabhakaran from Alankulam constituency win?
28.3.2026
தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தென்காசி தெற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.ஆர்.பி. பிரபாகரன் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளார்.
இவரது தந்தை பால்துரை கீழப்பாவூர் பேரூர் அதிமுக செயலாளர், கீழப்பாவூர் ஒன்றிய கழக செயலாளர், வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராக பணியாற்றியவர் இவரது தாயார் ஜானகி ஆவார், வழக்கறிஞரான இவர் கீழப்பாவூரை பூர்வீகமாகக் கொண்டவர் இவரது மனைவி சுதனா குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணி புரிந்து வருகிறார்.
இவரது மகள் 12 ம் வகுப்பும், மகன் எட்டாம் வகுப்பு பயின்று வருகின்றனர் கீழப்பாவூர் பேரூராட்சியில் மேலமைப்பு பிரதிநிதி, மாவட்ட மாணவர் அணி செயலாளர், ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி கழகச் செயலாளர், திருநெல்வேலி புறநகர் மாவட்ட கழக செயலாளர் பதவி வகித்த இவர், 2014 முதல் 2019 வரை திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்ற அப்போதைய பொதுச் செயலாளர் ஜெயலலிதா இவருக்கு வாய்ப்பு வழங்கினார் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்னர் தென்காசி தெற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பதவியில் தற்போது வரை பணியாற்றி வரும் இவருக்கு ஆலங்குளம் பகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆலங்குளம் தொகுதியை உள்ளடக்கிய திருநெல்வேலி நாடாளுமன்ற தேர்தலில் ஐந்தாண்டுகள் பணியாற்றிய அனுபவம் அதன் மூலம் உள்ள நல்வாய்ப்பினால் ஆலங்குளம் தொகுதியில் வெற்றி வாகை சூடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.