August 22, 2026

Seithi Saral

Tamil News Channel

டிரோன் தாக்குதலில் சேதமான குவைத் மின்உற்பத்தி நிலையங்கள்

1 min read

Kuwaiti power plants damaged in drone attack

6.4.2026
அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் ஒரு மாதத்தைக் கடந்துள்ளது. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தியது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது. இதன் எதிரொலியாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், குவைத் நாட்டில் உள்ள மின் நிலையங்கள் மீது ஈரான் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதை குவைத் அரசு உறுதி செய்தது.

குவைத் அரசுக்கு எதிராக ஈரான் மேற்கொண்டுள்ள தாக்குதலின் ஒரு பகுதியாக, ஈரானிய டிரோன் தாக்குதல்கள் குவைத்தில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து, மின் உற்பத்தி மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்கி, கணிசமான பொருள் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன என குவைத் மின்சார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பாத்திமா அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *