June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு 26 லட்சம் பேர் விண்ணப்பம்

1 min read

26 lakh people applied for NEET exam across the country

7.4.2026
நாடு முழுதும் எம். பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை, ‘நீட் நுழைவுத் நடக்கிறது. தேர்வு அடிப்படையில் நடப்பாண்டு நுழைவுத் தேர்வு, வரும் மே 3ம் தேதி நடக்கிறது. இதற்கான விண்ணப்பப்பதிவு, கடந்த பிப்., 8ம் தேதி துவங்கி, மார்ச் 11ம் தேதி வரை நடந்தது. கடந்த ஆண்டுகளை காட்டிலும், நடப்பாண்டு ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

இதன்படி இளநிலை மருத்​து​வப் படிப்​பு​களுக்​கான நீட் தேர்​வுக்கு இது​வரை இல்​லாத அளவுக்கு நடப்பு ஆண்​டில் 26 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் விண்​ணப்​பித்​துள்​ளனர். நாடு முழுவதும் கடந்த 2024ம் ஆண்டு, 24.06 லட்சம் பேரும், 2025ம் ஆண்டு 22.76 லட்சம் பேரும் விண்ணப்பித்த நிலையில், தற்போது 26 லட்சமாக உயர்ந்துள்ளது.

2026-27-ம் கல்வி ஆண்​டுக்​கான நீட் தேர்வு நாடு முழு​வதும் மே 3-ம் தேதி பிற்​பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடை​பெற உள்​ளது. தமிழகத்​தில் சென்​னை, செங்கல்​பட்​டு, திரு​வள்​ளூர், திருச்​சி, மதுரை, கோவை என 30 நகரங்​கள் உட்பட நாடு முழு​வதும் 552 நகரங்​களில் தேர்வு நடக்​கிறது. துபாய், அபு​தாபி, தோகா, மஸ்​கட், ரியாத், சிங்​கப்​பூர் என வெளி​நாடு​களில் 16 இடங்​களில் தேர்வு நடை​பெறுகிறது.

நீட் தேர்வுக்கான விண்​ணப்​பங்​களை பரிசீலனை செய்​யும் பணி​கள் இறு​திக் கட்​டத்தை எட்​டி​யுள்​ளநிலையில், சில நாட்​களில் ஹால் டிக்​கெட்டை இணை​யதளத்​தில் பதிவேற்​றம் செய்ய தேசிய தேர்​வு​கள் முகமை திட்​ட​மிட்​டுள்​ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *