ஈரான் – அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கு இந்தியா வரவேற்பு
1 min read
India welcomes Iran-US ceasefire
8/4/2026
அமெரிக்கா – ஈரான் இடையே இரண்டு வார காலத்திற்கு தற்காலிகமாக போர் நிறுத்தம் ஏற்பட்ட நிலையில் பாகிஸ்தானில் இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா – ஈரான் இடையே ஏற்பட்டுள்ள இந்த தற்காலிக போர் நிறுத்தத்தை பல்வேறு நாடுகளும் வரவேற்றுள்ளன. அந்த வகையில், இந்தியாவும் வரவேற்பு தெரிவித்துள்ளது.இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இது தொடர்பாக கூறியிருப்பதாவது:
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தத்தை இந்தியா வரவேற்கிறது. இது மேற்கு ஆசியாவில் நிலையான அமைதிக்கு வழிவகுக்கும். மத்திய கிழக்கு போர் உலகளாவிய எரிசக்தி விநியோகம், வர்த்தக வலைப்பின்னல்களை சீர்குலைத்துள்ளது. ஆகவே ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தடையற்ற கப்பல் போக்குவரத்தை எதிர்பார்க்கிறோம்”
இவ்வாறு தெரிவித்துள்ளது.