June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆவுடையானூர் ஊராட்சியில் தேங்கி கிடக்கும் சாக்கடை

1 min read

Stagnant sewer in Avudaiyanur panchayat

9.4.2026
தென்காசி மாவட்டம் , கிழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், ஆவுடையார் ஊராட்சி பகுதியில் தொடர்ந்து பல நாட்களாக சாக்கடை நீர் தெருக்களின் தேங்கி கிடப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவே உடனடியாக அதனை அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.என்று ஆவுடையனூர் வைத்திலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் சட்ட உரிமை நீதி பாதுகாப்பு இயக்க நிர்வாகியுமான மாரியப்பன்
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கோரிக்கை மனதில் அவர் கூறியிருப்பதாவது;-

தென்காசி மாவட்டம் கொளப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், ஆவுடையானூர் ஊராட்சி பஸ் ஸ்டாப் மெயின் ரோட்டில் தேங்கி நிற்கும் சாக்கடை கழிவுநீர் தேங்கி கிடக்கிறது அதனை உடனடியாக அகற்றுவது சம்மந்தமாக ஆவுடையார் ஊராட்சி மன்றத்தலைவர், கிழப்பவர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
ஆகியோரிடம் பலமுறை எடுத்துக் கூறியும் அந்த பகுதியில் தேங்கி கிடக்கும் சாக்கடை கழிவுநீரை அகற்ற எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

மேற்படி ஆவுடையானூர் பஸ் ஸ்டாப் அருகே உள்ள கழிவுநீர் கால்வாய்களில் பொதுமக்கள் சிலர் மண் சரள்களை கொட்டி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாய்களை அடைத்து வைத்துள்ளனர்.இதனால் டெங்கு ,மலேரியா போன்ற பெருந்தொற்று நோய் பரவும் நிலை உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் , பொதுமக்கள் சாலையை பயன்படுத்த முடியாத அவலநிலை உள்ளது.

இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேற்படி நிலை குறித்து கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டால் பொதுமக்களின் பிரச்சனைகளை கண்டு கொள்வதே இல்லை நேரில் சென்று ஆய்வு செய்வதும் இல்லை.

புதிதாக கழிவுநீர் செல்ல கால்வாய் அமைத்திடவும் மேலும் சம்மந்தப்பட்ட பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் அடைத்து வைத்துள்ள ஆக்கிரமிப்பை அகற்றி சாக்கடை கழிவுநீர் நிரந்தரமாக செல்ல ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கும் அறிவுறுத்தி உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *