களக்காடு அருகே மனைவி இறந்ததால் விவசாயி தற்கொலை
1 min read
Farmer commits suicide after wife dies near Kalakkadu
9.4.2026
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மேல வடகரை வடக்கு தெருவை சேர்ந்தவர் தாயப்பன் மகன் முருகன் (வயது 44), விவசாயியான இவரது முதல் மனைவி பிரிந்து சென்று விட்டார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் 2வதாக திருமணம் செய்து மனைவி மற்றும் ஒரு ஆண், பெண் குழந்தை உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் முருகனின் மனைவி இறந்து விட்டார். இதனால் முருகன் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். விரக்தியடைந்த அவர் கடந்த மாதம் களைக் கொல்லி விஷத்தை குடித் துள்ளார். அப்போது அவருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் முருகன் உடல் நிலையில் எந்த பிரச்சனையும் இல்லாததால் அவர் வீட்டில் இருந்துள்ளார்.
இதையடுத்து இதில் இதையடுத்து சிலநாட்களுக்குப் பின்னர் திடீரென தலை சுற்றல் ஏற்பட்டு முருகன் மயங்கி விழுந்துள்ளார்.
அவரை உறவினர்கள் மீட்டு சிகிச் சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது தான் ஏற்கனவே விஷம் குடித்ததை தெரிவித்துள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை முருகன் பரிதாபமாக இறந் தார். இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி இறந்த சோகத்தில் 3 குழந் தைகளையும் தவிக்க விட் டுவிட்டு விவசாயி தற் கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற் படுத்தியுள்ளது.