June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

அம்மையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

1 min read

Voting Awareness Marathon Competition in Ammai

12.4.2026
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உட்கோட்ட போலீசார் சார்பாக 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு மாரத்தான்; பெண்கள் உள்பட சுமார் 1,800 பேர் பங்கேற்றனர்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உட்கோட்ட போலீசார் சார்பாக என் வாக்கு என் உரிமை என்ற தலைப்பில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி அம்பாசமுத்திரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் தொடங்கப்பட்டது.

இந்தப் போட்டியை அம்பாசமுத்திரம் டிஎஸ்பி கணேஷ்குமார் கொடியை சேர்த்து தொடங்கி வைத்தார், தொடர்ந்து இளைஞர்கள், சிறுவர்கள் மட்டுமின்றி போலீசார், தீயணைப்பு துறையினர், வருவாய்த் துறையினர் என சுமார் 1,500 ஆண்களும், 300 பெண்களும் இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர்.

குறிப்பாக தமிழக வெற்றி கழக வேட்பாளர் ராஜ கோபால் இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடினார். அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும். அது நமது கடமை உரிமை என அவர் தெரிவித்தார்.

இந்த ஓட்டப்பந்தயமானது தனியார் பள்ளியில் தொடங்கப்பட்டு அம்பை மெயின் பஜார் வழியாக சுமார் 7.5 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது. தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கமும் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது..

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *