June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல்

1 min read

Mekedatu Dam issue: Tamil Nadu government files review petition in Supreme Court

14.4.2026
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை நிராகரித்து திருப்பி அனுப்ப மத்திய நீர்வளத்துறை ஆணையத்துக்கு உத்த ரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு கடந்த நவம் பர் 13-ந் தேதி தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு அரசு தரப்பில் வக்கீல் மிஷா ரோத்தகி மனு தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், ‘மேகதாது அணை திட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசின் மனுவை நிராகரித்தது காவிரி வழக் கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்புக்கு எதிரானது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அமல்படுத் தும் அமைப்பாகவே காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உள்ளது. அதற்கு மேல் வேறு அதி காரம் இல்லை. இந்த விவகாரத்தில் ஆணையத்தை முடிவு எடுக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதித் தது தவறானது.

எனவே, இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. இந்த மறு ஆய்வு மனுவை தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், விபுல் எம்.பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று(புதன்கிழமை) விசாரிக்க உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *