June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

துணை ஜனாதிபதி வீட்டில் தமிழ் புத்தாண்டு கொண்டாடிய பிரதமர் மோடி

1 min read

Prime Minister Modi celebrated Tamil New Year at the Vice President’s residence

14.4.2026
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் சித்திரை முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் நேற்று அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பொதுமக்கள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இல்லத்திற்கு நேரில் சென்ற பிரதமர் மோடி அவருக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். பிறகு அவரது இல்லத்தில் உள்ள பூஜை அறையில் வழிபாட்டிலும் ஈடுபட்டார். பின்னர் பிரதமர் மோடிக்கு முருகப்பெருமான் புகைப்படத்தை சி.பி.ராதாகிருஷ்ணன் பரிசாக கொடுத்தார்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “சிறப்பு வாய்ந்த புத்தாண்டு தினத்தில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். நல்ல ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் நிறைந்த அற்புதமான ஆண்டாக அமைந்திட பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

புனிதமான புத்தாண்டு தினத்தையொட்டி இனிய நல்வாழ்த்துகள். இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வெற்றியும், நல்ல ஆரோக்கியமும் நிறைந்திருக்க நான் பிரார்த்திக்கிறேன். சிறப்புமிக்க இந்த நாள் புதுப்பித்தல், நம்பிக்கை மற்றும் புதிய தொடக்கங்களின் கொண்டாட்டமாகும். இது தமிழ்ப் பண்பாட்டின் பெருமையைப் போற்றும் ஒரு தருணமாகும். அதன் இலக்கியம், இசை, கலை, தத்துவம், பக்தி ஆகியவற்றின் வளமான பாரம்பரியம் உலகெங்கிலும் உள்ள மக்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது.

சிறப்புமிக்க இந்த நாள் நமது சமூகத்தில் ஒற்றுமை உணர்வை மேலும் வளர்க்கட்டும். மகத்தான தமிழ் பண்பாட்டால் உத்வேகம் பெற்று, நாம் வெற்றியின் புதிய சிகரங்களை அடைவதோடு, இயற்கையுடனான நமது பிணைப்பையும் ஆழப்படுத்திக் கொள்வோம்’
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *