நாகர்கோவிலில் பிரதமர் மோடியின் பிரம்மாண்ட வாகன பேரணி
1 min read
Prime Minister Modi’s grand motorcade in Nagercoil
15.4.2026
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று நாகர்கோவிலில் பிரம்மாண்ட வாகன பேரணி நடத்தினார்.
இதற்காக அவர் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு -நாகர்கோவில் வருகை தந்தார். பிறகு வேப்பமூடு பகுதியில் இருந்து வடசேரி சாலை வரை பிரதமர் மோடி சாலை வலம் மேற்கொண்டார். வழியில் அம்பேத்கர் சிலைக்கு மலர் தூவினார். எம்.ஜி.ஆர் சிலை அருகே பேரணி நிறைவு பெற்றது. மோடியுடன் எடப்பாடி பழனிச்சாமி, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இருந்தனர்.
வழிநெடுக தொண்டர்களும், பொதுமக்களும் பார்த்தனர். அவர்களை பார்த்து மோடி கையசைக்தார்.