சீனாவில் போப்புக்கு விசுவாசமாக இருக்கும் தேவாலயங்களை கலைக்க அரசு அறிவுறுத்தல்
1 min read
China orders dissolution of churches loyal to Pope
17.4.2026
சீனாவில் உள்ள சுமார் ஒரு கோடியே 20 லட்சம் கத்தோலிக்கர்கள் மீது அந்நாட்டு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருவதாக ‘மனித உரிமைகள் கண்காணிப்பகம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. வாட்டிகன் மற்றும் போப் ஆண்டவருக்கு விசுவாசமாக இருக்கும் தேவாலயங்களை கலைத்துவிட்டு. கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு தேவாலயங்களில் இணையுமாறு மக்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
மதக் கொள்கைகளை சீன மயமாக்கும் நோக்கில், பாதிரியார்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்படுவதோடு, அவர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான தேவாலயங்கள் இடிக்கப்பட்டுள்ளன.
2018-ல் வாட்டிகனுடன் போடப்பட்ட ஒப்பந்தத்துக்கு பிறகும், சீனாவில் மதச் சுதந்திரம் நசுக்கப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.