கடையநல்லூர் மதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் ராஜகண்ணப்பன் பிரசாரம்
1 min read
Minister Rajakannappan campaigns in support of MDMK candidate in Kadayanallur
17.4.2026
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் தி.மு.இராசேந்திரனுக்கு ஆதரவாக அமைச்சர் ராஜகண்ணப்பன் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் வருகை தந்த மாண்புமிகு அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பை ஏற்படுத்திய திமுக மற்றும் தோழன்மை கட்சி நிர்வாகிகள் #அமைச்சர் #ராஜகண்ணப்பன் அவர்கள் கிருஷ்ணாபுரம் பகுதியில்,
கடையநல்லூர் சட்டமன்ற வெற்றி வேட்பாளர் தி.மு. #ராஜேந்திரன் அவர்களை ஆதரித்து உரையாற்றிய போது கூறியதாவது:-
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வழக்கறிஞர் தி.மு.இராசேந்திரனுக்கு அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்யுங்கள்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செய்யப்பட்டு வருகிறது அனைத்து தரப்பு மக்களும் திமுகவின் நலத்திட்ட உதவிகளால் பயனடைந்து வருகிறார்கள்.
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நல்ல திட்ட உதவிகளும் தொடர்ந்து பொதுமக்களுக்கு கிடைத்திட மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் அமைந்திட வேண்டும்.
அதற்கு உங்களது மேலான வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் முத்திரையிட்டு நமது கூட்டணி கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் திருமலாபுரம் இராசேந்திரன் அவர்களை அமோக வெற்றி பெறச் செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறேன் இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் மா.சுந்தர மகாலிங்கம், கடையநல்லூர் நகர சேர்மன் மூப்பன் ஹபீப் ரகுமான், நகரச் செயலாளர் அப்பாஸ், உதயநிதி நற்பணி மன்றம் ஈஸ்வரன், யாத்திர பழனி, ஜெய்முத்து, சென்பகநல்லுர் கண்ணன், முருகானந்தம், சுகுமார் , பிரகதிஸ்ராஜா, பெருமாள், துரை. பி.எஸ்.மணி நெடுமாறன், ஆசாத் ராஜா முகம்மது,
மதிமுக மாவட்ட செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர் அ.சுரேஷ்(எ) சுப்பையா,
தமிழ்நாடு காங்கிரஸ் சட்டத்துறை மாநில செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ஆர்.எஸ்.ரமேஷ், தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயலாளர் சுரேஷ்,வழக்கறிஞர் செந்தூர்பாண்டியன், நகர திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் சிவா உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.