June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

விஜய், திருச்சி அந்தோணியார் தேவாலயத்தில் பிரார்த்தனை

1 min read

Vijay prays at St. Anthony’s Church in Trichy

19.4.2026
தவெக தலைவர் விஜய் இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் ரோடு ஷோ மேற்கொண்டுள்ளார். ரோடு ஷோக்கு இடையே, திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆலயத்தில் மண்டியிட்டு விஜய் பிரார்த்தனை செய்தார். ஆலயத்தில் பிரார்த்தனை செய்து முடித்த பிறகு விஜய் மீண்டும் ரோடு ஷோ புறப்பட்டார். விஜய்யை பார்க்க வழிநெடுக தவெக தொண்டர்கள் உற்சாகமாக திரண்டு இருந்தனர்.

விஜய்யை வரவேற்று பூக்களையும், பரிசு பொருட்களையும் வீசினர். விஜய்யின் ரோடு ஷோவால் திருச்சியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போலீசாரும் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்யே போட்டியிடுவதால் இந்த தொகுதி பெரும் கவனத்தை பெற்றுள்ளது. திமுக சார்பில் இந்த தொகுதியில் இனிகோ இருதயராஜ் போட்டியிடுகிறார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *