June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநர் உயிரிழப்பு

1 min read

Driver dies after auto overturns

21.4.2026
பாளையங்கோட்டை, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்ஸ் வினோத் ராஜா (29). ஆட்டோ ஓட்டுநர். இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது ஆட்டோவில் சமாதானபுரம் அருகே சென்றபோது நாய் குறுக்கே வந்ததாம். இதனால், அவர் ஆட்டோவை நிறுத்த முயன்றுள்ளார்.

இதில், ஆட்டோ கவிழ்ந்து விபத்து நேரிட்டது. அலெக்ஸ் வினோத் ராஜா காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *