June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லை அருகே பூட்டிய வீட்டில் திருட முயன்ற வாலிபர் கைது

1 min read

Youth arrested for attempting to steal from locked house near Nellai

21.4.2026
நெல்லை அருகே பேட்டை, விஸ்வநாதர் தெருவைச் சேர்ந்தவர் ராகுல்(32). மாநகராட்சி ஒப்பந்த பணி மேற்பார்வையாளர். இவரது தாய் , தந்தை இருவரும் தூய்மைப் பணியாளர்கள்.

இவர்கள் 3 பேரும், கடந்த 16 ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றிருந்தனர். பிற்பகலில் அவரது வீட்டுகதவை உடைக்கும் சப்தம் கேட்பதாக பக்கத்துவீட்டினர் அளித்த தகவலின் பேரில், ராகுல் வந்து பார்த்துள்ளார்.

அப்போது, வீட்டின் கதவை உடைக்க முயற்சி நடந்திருப்பதும், அங்கிருந்த வாளியில் மர்மநபர்கள் கைப்பேசியை விட்டுச்சென்றிருப்பதும் தெரியவந்தது.

இது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில், பேட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில், சுத்தமல்லி, கிரமங்கலம், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த கணபதி(25) என்பவவருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *