அட்சய திரிதியை-நகை வாங்க சென்றவரிடம் ரூ.2 லட்சம் பறிமுதல்
1 min read
Rs. 2 lakh seized from a person who went to buy jewellery on Akshaya Tritiya
21.4.2026
தமிழக சட்டசபை தேர்தல் நாளைமறுநாள் நடைபெற உள்ளது. இதனையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வினியோகத்தை தடுக்க பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று நாகர்கோவில் வாத்தியார்விளை பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் வந்த மருந்து கடை ஊழியரிடம் ரூ.2 லட்சம் இருந்தது. ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுபற்றி மருந்து கடை ஊழியர் கூறுகையில், அட்சய திருதியையொட்டி நகை வாங்குவதற்காக பணத்தை கொண்டு சென்றதாகவும், ஆனால் அதிகாரிகள் அதை பறிமுதல் செய்து விட்டதாகவும் கூறினார். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.