June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

பயங்கரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது- பிரதமர் மோடி உறுதி

1 min read

India will never surrender to terrorism – PM Modi assures

22.4.2025
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. பஹல்காமின் பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், பஹல்காமில் கடந்த ஆண்டு இதேநாளில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவில் கொள்கிறேன். அவர்கள் ஒருபோதும் மறக்கப்படமாட்டார்கள். தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவில் வாழும் குடும்பத்தினருடன் நான் துணை நிற்கிறேன். இந்த துக்கத்தில் நாடு ஒன்றாக நிற்கிறது. பயங்கரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது. பயங்கரவாதம் ஒருபோதும் வெற்றிபெறாது

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *