சேரன்மகாதேவியில் குடியிருப்பு பகுதியில் சுற்றி திரியும் மிளாக்கள்
1 min read
Millas roaming around the residential area in Cheranmahadevi
25.4.2026
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் இருந்து களக்காடு செல்லக்கூடிய சாலையில் ஏராளமான மிளாக்கள் வசித்து வருகின்றன. இதனால் அந்த சாலையில் அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது கடந்த சில தினங்களாக உணவு தேடி சேரன்மகாதேவி குடியிருப்பு பகுதிகளில் மிளா நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக நேற்றிரவு சேரன்மகாதேவி மெயின் ரோட்டில் ராமர் என்பவருக்கு சொந்தமான தேநீர் கடை சுற்று சுவரில் ஜோடியாக ஓடி வந்த மிளாக்கள் ஒன்றுக்கொன்று மோதி அங்கும் இங்குமாக சுற்றி திரிந்தது. அப்போது சாலையில் வாகனங்கள் சென்றாலும் அதிர்ஷ்டவசமாக விபத்துக்கள் தவிர்க்கப்பட்டது.
இந்த பகுதியில் தொடர்ந்து மிளாக்கள் வருவதால் இப்பகுதி சாலைகளில் அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட வனத்துறையினர் மிளாக்கள் குடியிருப்புகளுக்குள் சுற்றி திரிவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..