தென்காசி மாவட்ட 5 தொகுதிகளில் 82.40 சதவீதம் வாக்குப்பதிவு
1 min read
82.40 percent voting in 5 constituencies of Tenkasi district
25.4.2026
தென்காசி மாவட்டத் தில் 82.40 சதவிகிதம் வாக்குகள் பதிவானதாக மாவட்ட தேர்தல் அலுவ லரும், மாவட்ட ஆட்சிய ருமான ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லூர்,, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ஆலங் குளம் ஆகிய 5 சட்டப்பேரவை தொகுதிகள் உள் ளன. இங்கு மொத்தம் ஆண்கள் 6,22,003, பெண் கள் 6,50,767, மூன்றாம் பாலினத்தவர் 170 என மொத்தம் 12,72,940 வாக் காளர்கள் உள்ளனர்.
இதில் சங்கரன்கோவில் தொகுதியில் 20 பேர், வாசு தேவநல்லூர் தொகுதியில் 18 பேர், கடையநல்லூர் தொகுதியில் 22 பேர், தென்காசி தொகுதியில் 22 பேர், ஆலங்குளம் தொகு தியில் 13 பேர் என திமுக, அதிமுக, தவெக, நாம்தமி ழர், புதிய தமிழகம் கட்சி உள்ளிட்ட 95 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
வாக்குப்பதிவை யொட்டி 1680 வாக்குச்சாவடிகள்அமைக் கப்பட்டு, 8,064 அரசுப் பணியாளர்கள், ஆசிரியர் கள் தேர்தல் பணியில் ஈடு படுத்தப்பட்டனர். ஒவ் வொரு வாக்குச்சா வடிக்கும் 4 பணியாளர்கள் வீதம் ஒதுக்கப் பட்டு, கூடு தலாக 20சதவிகித பணியா ளர்கள் காத்திருப்பில் வைக்கப்பட்டிருந்தனர். மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் காத்தி ருக்காமல் வாக்களிக்கும் வகையில் தனி வரிசை, அனைத்து வாக்குச்சாவடி
களுக்கும் வாக்காளர்க ளுக்கு தேவை யான அடிப் படை வசதிகள் மேற் கொள்ளப்பட்டிருந் தன.300 க்கும் மேற்பட்ட மத்திய ஆயுதப்படை வீரர் களும், காவல்துறையின ரும் பாதுகாப்புப் பாதுகாப்புப் பணி மில்ஈடுபப்பத்தன் நிலவரம் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியரு மான கமல்கிஷோர் தெரி வித்ததாவது:
சங்கரன்கோவில் 81.04 சதவீதம், வாசுதேவநல் லூர் 81.52 சதவீதம், கடை யநல்லூர் 81.36 சதவீதம், தென்காசி 82.43 சதவீதம், ஆலங்குளம் 85.53 சதவீ தம் வாக்குப்பதிவாகி உள் ளது. ஒட்டுமொத்தமாக தென்காசி மாவட்டத்தில் 82.40 சதவீதம் வாக்குகள் பதிவாகி பதிவாகி உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்தார்.