June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

முதலியார்பட்டி ரயில்வே கேட் 10 நாளில் சரி செய்யப்படும்

1 min read

Mudaliarpatti Railway Gate will be fixed in 10 days

25.4.2026
தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள முதலியார்பட்டி ரயில்வே கேட் தண்டவாளப் பகுதியில் உள்ள பள்ளங்களை உடனடியாக சரி செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட அமைப்புச் செயலாளர் கட்டி அப்துல் காதர் ரயில்வே துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் கடையம் ரயில் நிலையத்தில் வைத்து, கடையம் ரயில் நிலைய மேலாளர், திருநெல்வேலி ரயில் நிலைய காவல் துணை ஆய்வாளர் கோபால கிருஷ்ணன், இந்திய முஸ்லீம் லீக் மாவட்ட அமைப்பு செயலாளர் கட்டி அப்துல்காதர் ஆகியோர் கலந்து கொண்ட பேச்சு வார்த்தையில், முதலியார் பட்டி, ரவணசமுத்திரம் தண்டவாளங்களில் உள்ள பள்ளங்களை சரி செய்யும் பணிகள்,
இரண்டு தினங்களில் துவங்கும் என்றும், பத்து தினங்களில் பணிகள் நிறைவடையும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

எனவே போராட்ட முடிவை தற்காலிகமாக கைவிடுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
பத்து தினங்களுக்குள் பள்ளம் சரி செய்யப்படவில்லை யென்றால் திட்டமிட்டபடி அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட அமைப்பு செயலாளர் கட்டி அப்துல் காதர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *