வெடிகுண்டு தாக்குதலில் மாலி பாதுகாப்பு துறை அமைச்சர் உயிரிழப்பு
1 min read
Mali’s defense minister killed in bomb attack
27.4.2026
மாலியின் பாதுகாப்பு அமைச்சர் தனது வீட்டின் மீதான தாக்குதலில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
தலைநகர் பமாக்கோ மற்றும் பிற நகரங்களுக்கு அருகே ஜிஹாதி போராளிகள் மற்றும் பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களுடன் ராணுவம் இரண்டாவது நாளாக சண்டையிட்டு வருவதால், அந்நாட்டின் ராணுவ ஆட்சிக்குழு கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.
பமாகோவிற்கு வெளியே, ராணுவ ஆட்சியின் கோட்டையான கிட்டாவில் உள்ள பாதுகாப்பு அமைச்சர் சாடியோ கமாராவின் வீட்டில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில், அவரும், அவரது இரண்டாவது மனைவியும், இரண்டு பேரக்குழந்தைகளும் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினரும் ஓர் அதிகாரியும் தெரிவித்தனர்.
அஸாவாத் விடுதலை முன்னணி (FLA) கூட்டணியை சேர்ந்த துவாரெக் கிளர்ச்சியாளர்களும், இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கான ஆதரவு ஜிஹாதி குழுவும் (JNIM) நேற்று (சனிக்கிழமை) ஒருங்கிணைந்தன. இதையொட்டி நடந்த திடீர் தாக்குதல்கள், அந்த நாட்டின் பல பகுதிகளை குறிவைத்தன.
பமாகோவிற்கு அருகிலுள்ள கிட்டா, கிடால், காவோ மற்றும் செவெரே உள்ளிட்ட பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் சண்டை தொடங்கியது.