June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

டிரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் சிறந்த ஆசிரியர் விருது பெற்றவர்

1 min read

The shooter at the Trump event was awarded the best teacher award

27.4.2026
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கலந்து கொண்ட விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய கோல் டோமஸ் ஆலனை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை அதிகாரி காஷ் படேல் கூறியதாவது:-
“இந்த சம்பவம் தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடந்து வருகிறது. சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறோம். மேலும் அவர் கைத்துப்பாக்கி மற்றும் கத்திகளை வைத்திருந்தார். குண்டு துளைக்காத கவச உடையும் அணிந்திருந்தார்”
இவ்வாறு அவர் கூறினார்.
ஆலன் கலிபோர்னியா தொழில்நுட்ப கழகத்தில் என்ஜினீயரிங் பட்டம் பெற்றவர் ஆவார். பின்னர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராகவும், பகுதிநேர ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார். நாசாவிலும் அவர் பயிற்சி பெற்று வந்துள்ளார்.
2024-ம் ஆண்டு கமலா ஹாரீசுக்கு நன்கொடை அளித்துள்ளார். மேலும், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் சிறந்த ஆசிரியருக்கான விருதை பெற்றுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *