திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம்
1 min read
Minister Shekarbabu Swami’s Darshan at Tirupati Ezhumalaiyan Temple
3.5.2026
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ் பெற்ற ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நடந்து முடிந்த தமிழகம் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், தீர்த்த பிரசாதங்களும் வழங்கப்பட்டன.