June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

மணிமுத்தாறு அணையிலிருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறப்பு

1 min read

Water released from Manimuthar Dam for agriculture

3.5.2026
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பிரதான அணைகளில் ஒன்றான மணிமுத்தாறு அணையிலிருந்து கார் பருவ சாகுப டிக்காக இப்பகுதி விவசா யிகளின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதல மைச்சரின் ஆணைக்கிணங்க பொதுப்பணித் துறை அதிகாரிகள் பெருங்கால் மதகு வழியாக பாசன வசதிக்காக தண்ணீர் திறந்தனர்.

இந்த மணிமுத்தாறு அணை பகுதிக்கு உட்பட்ட ஜமீன் சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி வைராவிகுளம், தெற்கு பாப்பாங்குளம், கல்லிடைக்குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 2756.62 ஏக்கர் விவசாய நிலங்களில் கார் பருவ சாகுபடியில் விவசாயிகள் தங்கள் பணிகளை மும்மு ரமாக செய்துவந்தனர்.

இந் நிலையில் தற்பொழுது தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு விவசாயிகள் தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

எனவே தமிழக அரசின் ஆணைக்கிணங்க பொதுப்பணித்துறை அதி காரிகள் கோவிந்தராஜ் மற் றும் முருகன் கார் பருவ சாகுபடிக்காக தண்ணீரை திறந்து வைத்தார்கள்.
(01.05.2026) முதல் (28.8.2026) வரை 120 நாட்களுக்கு 45 கன அடிக்கு மிகாமல் தண்ணீரின் தேவையை பொருத்து திறந்துவிடப்படுகிறது.

மணிமுத்தாறு அணையின் மொத்த கொள்ளளவு 118 அடி, தற்பொழுது நீர் வரத்து 66.10 கனஅடியாக வும், வெளியேற்றம் 45 கனஅடி யாகவும், அணை யின் தற்போதைய இருப்பு 78.87 கனஅடியாக உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *