தவெகவுக்கு பிரதமர் மோடி, ராகுல் வாழ்த்து
1 min read
PM Modi, Rahul congratulate Thaweka
4.5.2026
தமிழகத்தில் வெற்றி வாகை சூடிய நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகத்துக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல் வாழ்த்து தெரிவித்தனர்.
இது குறித்து சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பாவது:
தமிழக சட்டசபை தேர்தலில் தேஜ கூட்டணியை ஆதரித்த தமிழக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மக்களின் பிரச்னைகளை சரி செய்வதிலும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம்.
தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழகத்துக்கு வாழ்த்துக்கள்; தமிழகத்தின் முன்னேற்றத்தையும், மக்களின் நலனையும் முன்னெடுத்துச் செல்வதில் மத்திய அரசு தனது அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ள விஜய்க்கு, பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் போனில் வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து சமூக வலைதளத்தில் ராகுல் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
நான் விஜயிடம் தொலைபேசியில் தவெகவின் சிறப்பான வெற்றிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
இந்தத் தேர்தலில் இளைஞர்களின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர்களின் கடின உழைப்பிற்கும், அவர்கள் அளித்த ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களின் நலன்களைத் தொடர்ந்து பாதுகாக்கவும், அவர்களுக்குச் சேவையாற்றவும் காங்கிரஸ் கட்சி உறுதியுடன் செயல்படும் என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.
ராகுல் தன் அறிக்கையில், திமுகவைப் பற்றியோ, முதல்வர் மு.க. ஸ்டாலினைப் பற்றியோ எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.