June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

சபாநாயகர் அப்பாவு தோல்வி

1 min read

Speaker Appavu, who contested from Radhapuram constituency, lost

4.5.2026
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் ஓட்டு போட தகுதி பெற்றிருந்தனர். மொத்தம் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில், இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில் த.வெ.க. வேட்பாளர் சதீஷ் கிறிஸ்டோபர் 12 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதே சமயம், ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட சபாநாயகர் அப்பாவு தோல்வி அடைந்துள்ளார்.

இந்த தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பாலகிருஷ்ணன் 52,084 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் கிரிஜா தாமரைப்பாண்டியன் 15,272 வாக்குகளும் பெற்று தோல்வி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *