6 மாநிலங்களில் ரெயில்வே திட்டங்களுக்கு ரூ. 23,437 கோடி-மத்திய மந்திரிசபை ஒப்புதல்
1 min read
Union Cabinet approves Rs 23,437 crore for railway projects in 6 states
6.5.2027
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு (CCEA), மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ரூ.23,437 கோடி மதிப்பிலான மூன்று ரயில்வே திட்டங்களை செயல்படுத்த ஒப்புதல் அளித்தது.
இதன் மூலம் இந்திய ரெயில்வேயின் தற்போதைய ரெயில் பாதை வலையமைப்பு 901 கிலோமீட்டர்களாக அதிகரிக்கப்படுகிறது.
இந்த திட்டங்களில் நாக்டா-மதுரா 3-ஆவது மற்றும் 4-ஆவது வழித்தடம், குண்டக்கல்-வாடி 3-ஆவது மற்றும் 4-ஆவது வழித்தடம் மற்றும் புர்வால்-சீதாபூர் 3-ஆவது மற்றும் 4-ஆவது வழித்தடம் ஆகியவை அடங்கும். மேலும் இவை 2030-31ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, முன்மொழியப்பட்ட இந்த திட்டமானது, சுமார் 83 லட்சம் மக்கள் தொகை கொண்ட 4,161 கிராமங்களுக்கான இணைப்பை மேம்படுத்தும்.
இந்தத் திட்டம் மகாகாலேஷ்வர், ரந்தம்பூர் தேசிய பூங்கா, குனோ தேசிய பூங்கா, கியோலாடியோ தேசிய பூங்கா, மதுரா, விருந்தாவன், மந்த்ராலயம் (ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடம்), ஸ்ரீ நெட்டிகண்டி ஆஞ்சநேய சுவாமி வாரி கோயில் (காசபுரம்), ஷ்யாம்ஸ்யநாத் கோயில் (காசபுரம்), ஷியாம்சரா கோயில் போன்ற பல முக்கிய சுற்றுலா தலங்களுக்கு ரயில் இணைப்பை மேம்படுத்தும்.
நிலக்கரி, உணவு தானியங்கள், சிமெண்ட், பெட்ரோலிய பொருட்கள், இரும்பு மற்றும் எஃகு, இரும்பு தாது, கொள்கலன்கள், உரங்கள் போன்ற பொருட்களை கொண்டு செல்வதற்கும் இவை இன்றியமையாத வழித்தடங்களாக உள்ளன.