கவர்னருடன் விஜய் சந்திப்பு- ‘2 நாளில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு
1 min read
Vijay meets Governor- ‘Order to prove majority in 2 days’
6.5.2026
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைக் கோரினார்.
113 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதத்தை வழங்கிய விஜய் நாளை காலை 11 மணிக்கு விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பதவியேற்ற இரண்டு நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
விஜய் மே.7ம் தேதி பதவியேற்க உள்ளநிலையில், மே.9க்குள் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தவெக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை விட 10 இடங்கள் குறைவாகப் பெற்றுள்ளதால், கூட்டணி அல்லது மற்றவர்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
தற்போது காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ள நிலையில், இன்னும் 6 இடங்களுக்கு மற்றக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது தவெக.