தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் – எடப்பாடி பழனிசாமி பதிவு
1 min read
Heartiest congratulations to the party forming the government in Tamil Nadu – Edappadi Palaniswami
9.5.2026
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றுள்ள வேட்பாளர்களுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள வீட்டில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் 41 பேர் பங்கேற்றனர். எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்பட 6 பேர் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று முடிந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:-
நடைபெற்று முடிந்த 17-வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.