June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

மேலபட்டமுடையார்புரத்தில் இந்து சமய பண்பாட்டு பயிற்சி வகுப்பு

1 min read

Hindu religious and cultural training course in Melapattamudaiyarpuram

10.5.2026
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள
மேலபட்டமுடையார்புரத்தில் நடைபெற்ற இந்து சமய பண்பாட்டு பயிற்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பாரத் ஸ்கேன்ஸ் நிறுவனர் டாக்டர் இம்மானுவேல் பரிசு பொருட்களை வழங்கினார்.

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி, கீழப்பாவூர் பேரூராட்சிக்குட்பட்ட மேலபட்டமுடையார்புரம் கிராமத்தில் கோடை விடுமுறையையொட்டி கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு கோடை கால இந்து சமய பண்பாட்டு பயிற்சி நடைபெற்று வருகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுக்கு ஸ்லோகங்கள், பஜனைகள், யோகா, தியானம், நடனம், ஆன்மீக அறிவை வளர்த்தல், உடல் ஆரோக்கியம் மேம்படுத்துதல், செய்முறை பயிற்சி போன்றவை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

நிறைவு நாள் நிகழ்ச்சியில், பாரத் ஸ்கேன்ஸ் நிறுவனர் நம்ம டாக்டர் இம்மானுவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு அறிவுரைகள் வழங்கி பேசிகார். அப்போது அவர் பேசியதாவது:-
கோடை விடுமுறையில் செல்போன், தொலைக் காட்சியில் மூழ்காமல் இது போன்ற பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் குழந்தைகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். நானும் உங்களை போல் சிறிய கிராமத்தில் பிறந்து, வளர்ந்து, நன்றாக படித்து இன்று தமிழகம் மட்டுமல்ல இந்திய அளவில் சிறந்த மருத்துவராக உயர்ந்துள்ளேன். நீங்களும் என்னை போல் நன்றாக படித்து மருத்துவராகவோ, பொறியாளராகவும், ஆசிரியராகவோ அல்லது காவல்துறை அதிகாரிகளோh வந்து சாதித்து, உங்கள் பெற்றோருக்கும், உங்கள் கிராமத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டும். இது போன்று குழந்தைகள் நல் வழிப்படுத்தும் பயிற்சி வகுப்புகளை நடத்தி வரும் பயிற்சியாளர்களு நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் பயிற்சியாளர்கள் சீதாலட்சுமி, முத்துலட்சுமி, சத்யா, காளிராஜா, சுதன்ராஜ், கபினேஷ், அஜிதா, முத்துஅனுசியா மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சமூக ஆர்வலர் மாரிசெல்வம் செய்திருந்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *