August 21, 2026

Seithi Saral

Tamil News Channel

செங்கோட்டை வண்டிமலச்சியம்மன் கோவிலில் உழவார பணி

1 min read

Ploughing work at Sengottai Vandimalachiamman Temple

10.5.2026
தென்காசி மாவட்டம் செங்கோட்டை
வண்டிமலச்சியம்மன் கோவிலில் வைத்து திருநாவுக்கரசர் குருபூஜையை முன்னிட்டு தென் கைலாய பக்தி பேரவை, பிஎல்எம் ஸ்போர்ட்ஸ் அகாடமி, தாயின் மடியில் சமூக நல அறக்கட்டளை சார்பில் உழவார பணி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தென் கைலாய பக்தி பேரவை தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பிரபாமுரளி, அருணாச்சலம் பிரபு ஆகியோர் தலைமை தாங்கினா். தாயின் மடியில் சமூக நல அறக்கட்டளை நிறுவனா் கோமதிநாயகம் முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கோவில் வளாகத்தில் உள்ள புதர்மண்டிய பகுதிகளை சீரமைப்பு, மற்றும் கோவில் பூஜை பொருட்கள், திருவிளக்கு கோவிலின் உள்பிரகாரம் மற்றும் வெளிப்புற இடங்கள் சுத்தம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பேரவை நிர்வாகிகளுடன் இணைந்து பிஎல்எம் ஸ்போரட்ஸ் அகாடமி நிறுவனர்கள் எல்எம்.முரளி, எல்எம்.சாய்சித்திஷ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனா். உடன் திருவாசகம் முற்றோதுதல் குழு உறுப்பினா்கள் சமூக ஆர்வலா்கள் பக்தர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனா்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *