August 21, 2026

Seithi Saral

Tamil News Channel

அதிமுகவின் சி.வி.சண்முகம் அணியினருடன் முதல்வர் விஜய் சந்திப்பு

1 min read

Chief Minister Vijay meets with AIADMK’s C.V. Shanmugam team

12.5.2026
அதிமுகவில் உட்கட்சி பூசல் வேகம் எடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் சி.வி.சண்முகம் அணியினரை முதல்வர் விஜய் இன்று சந்தித்தார்.
சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின்னர் அதிமுகவில் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது. கட்சியின் தோல்விக்கு ஈபிஎஸ்சின் செயல்பாடுகளே காரணம் என்று கூறி அவருக்கு எதிராக சி.வி.,சண்முகம், எஸ்.பி. வேலுமணி தரப்பினர் செயல்பட்டு வருகின்றனர். சட்டசபை அதிமுக குழு தலைவராக எஸ்.பி வேலுமணியை நியமிக்க வலியுறுத்தி ஒரு தரப்பு எம்எல்ஏக்களும், எஞ்சிய எம்எல்ஏக்கள் தரப்பு, இபிஎஸ்சை நியமிக்க கோரி சட்டசபை சபாநாயகரிடம் தனித்தனியே கடிதம் அளித்து உள்ளனர்.
இந் நிலையில், தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி தரப்பினரை இன்று சந்தித்தார். சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள சி.வி.சண்முகம் அலுவலகம் வந்த விஜயை, இருவரும் உற்சாகமாக வரவேற்றனர். இந்த சந்திப்பின் போது நத்தம் விஸ்வநாதன், சி. விஜயபாஸ்கர், தங்கமணி, காமராஜ், எம்.ஆர். விஜயபாஸ்கர், அன்பழகன் உள்ளிட்ட பல முன்னாள் அமைச்சர்கள் பலரும் முதல்வர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அப்போது, சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி இருவரும் கட்சியின் ஆதரவு எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் அனைவரையும் முதல்வர் விஜய்க்கு அறிமுகம் செய்து வைத்தனர். தமிழக சட்டசபையில் நாளை தவெக அரசின் மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்க உள்ள நிலையில் இந்த சந்திப்பும், வரவேற்பும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *