பழைய குற்றாலம் அருவி பகுதியில் சீரமைப்பு பணிகள்- ஆட்சியர் ஆய்வு
1 min read
Renovation works in the old Courtallam waterfall area – Collector’s inspection
12.5.2026
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் பகுதியில் சுற்றுலாத் துறையின் சார்பில் அருவி பகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசி மாவட்டத்தில் சுற்றுலாத்துறையின் சார்பில் அருவி பகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் பழைய குற்றால அருவி பகுதியில் மழையினால் சேதம் அடைந்த சாலைகளை சீரமைப்பது குறித்தும், பெண்களுக்கான உடை மாற்றும் அறை சீரமைப்பு பணிகள் மற்றும் பல்வேறு சுற்றுலா வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில், மாவட்ட வன அலுவலர் முனைவர் ராஜ்மோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்டபாணி, வன அலுவலர் செல்லத்துரை, சுற்றுலா அலுவலர் நித்திய கல்யாணி. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக உதவி பொறியாளர் விஜில், ஆயிரப் பேரி ஊராட்சி மன்ற தலைவர் தி.சுடலையாண்டி, ஊராட்சி செயலர் ந.ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.