June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

பழைய குற்றாலத்தில் குளிக்க ரூ.20 கட்டணத்தை ரத்து செய்ய கோரிக்கை

1 min read

Request to cancel the Rs. 20 fee for bathing in the old courthouse

12.5.2026
பழைய குற்றால அருவியில் குளிக்க நிர்ணயம் செய்யப் பட்ட ரூ 20 கட்டணத்தை உடனடியாக அரசு ரத்து செய்ய வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன், கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,:-

குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மெயின் அருவி, தேன் அருவி, ஐந்தருவி, செண்ப காதேவி அருவி, பழைய குற்றால அருவியும், காசி விஸ்வநாதர் கோவிலும் மாவட்டத்தின் அடையாளமாக உள்ளது. உலகம் முழுவதும் உள்ள மக்களின் சுற்றுலாத்தலமாக திகழும் குற்றாலத்தை சுற்றியுள்ள பகுதி மக்களின் வாழ்வாதாரமாகவும் குற்றாலம் திகழ்கிறது.

தற்போது பழைய குற்றாலத்தில் பொதுமக்கள் குளிப்பதற்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஏழை எளிய மக் கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட பழைய குற்றால அருவி, இனி வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே என்ற சூழ்நிலை நிலவுகிறது. பார்க்கிங் கட்டணம், தனிநபர் குளிக்க கட் டணம், வாகன கட்டணம் என இந்த கட்டணங்களால் பொதுமக்கள் வருகையும் குறைந்து விடும், வியாபாரமும் பாதிக்கும்.
எனவே ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நலன் கருதி பழைய குற்றால அருவியில் குளிப்பதற்கான கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *