புளியங்குடியில் வீடு வீடாக சென்று புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
1 min read
Person arrested for selling tobacco products door to door in Puliyangudi
16.5.2026
தென்காசி மாவட்டம் புளியங்குடி மற்றும் சுற்றுவட் டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் ரசியமாக விற் யனை செய்யப்பட்டு வருவ தாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து புளியங்குடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் உத்தரவின் பேரில் எஸ்ஐ பவுல் தலைமையில் போலீஸார் ரமேஷ், கோடீஸ்வரன், ராமசாமி ஆகியோர் டி என் புதுக்குடி கற்பக வீதி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்தவரை சோதனை செய்ததில் அந்த பைக்கில் சீட்டுக்கு அடியில் புகையிலை பாக்கெட்டுகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. விசார ணையில் அவர் டி.என். புதுக்குடி சீதாராமன் என்பவரது மகன் முனியசாமி (வயது 29) என்பதும், அவர் மெயின் ரோட்டில் டீக்கடை வைத்திருப்பதும் தெரிய வந்தது. இவர் டீக்கடையில் மட்டுமின்றி நேரடியாக வீடு வீடாக சென்று கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு புகையிலைப் பொருட்களை சப்ளை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.’
இதனைத் தொடர்ந்து போலீசார் அவரது கடையில் சோதனை நடத்தினர். அங்கு சுமார் 14 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
உடனடியாக போலீசார் அங்கு இருந்த 14 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.11 ஆயிரம், மற்றும் அவரது பைக்கும் பறிமுதல் செய்தனர்.
உடனடியாக அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.