கேரள முதல் மந்திரியாக வி.டி.சதீசன் நாளை பதவி ஏற்பு- ராகுல்காந்தி, விஜய் பங்கேற்பு
1 min read
V.D. Satheesan to take oath as Kerala Chief Minister tomorrow – Rahul Gandhi, Vijay to attend
17.5.2026
இதற்கிடையே, 10 நாட்கள் இழுபறிக்கு பிறகு எதிர்க்கட்சி தலைவராக இருந்த வி.டி.சதீசனை முதல் மந்திரியாக தேர்வு செய்து காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. இதையடுத்து கவர்னர் ஆர்.வி.அர்லேகரை, வி.டி.சதீசன் சந்தித்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தைக் கொடுத்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி கேட்டுக்கொண்டார். அதற்கேற்ப கவர்னரும் அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், கேரளம் முதல் மந்திரியாக வி.டி.சதீசன் நாளை பதவி ஏற்க உள்ளார். நாளை காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் சென்டிரல் ஸ்டேடியத்தில் பதவி ஏற்பு விழா பிரமாண்டமாக நடத்தப்படுகிறது.
இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநில முதல் மந்திரிகள் சித்தராமையா (கர்நாடகம்), ரேவந்த் ரெட்டி (தெலுங்கானா), சுக்விந்தர் சிங் சுகு (இமாசல பிரதேசம்) உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.
கேரளம் மாநில சட்டசபை தேர்தல் முடிவு கடந்த 4-ம் தேதி வெளியானது. மொத்தமுள்ள 140 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 102 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
காங்கிரஸ் 63 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 22 தொகுதிகளைக் கைப்பற்றியது. கேரள காங்கிரஸ் (ஜோசப்) 7 இடங்களிலும், புரட்சி சோசியலிஸ்ட் கட்சி (ஆர்.எஸ்.பி.) 3 இடங்களிலும், கேரள காங்கிரஸ் (ஜேக்கப்), புரட்சி மார்க்சிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்டு மார்க்சிஸ்ட் கேரள மாநில கட்சி (சி.எம்.பி.கே.எஸ்.சி.) தலா ஒரு இடத்திலும், சுயேச்சைகள் (காங்கிரஸ் ஆதரவு) 4 இடங்களிலும் வெற்றி பெற்றன.
ஆளுங்கட்சியாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி 35 இடங்களிலும், பா.ஜ.க. முதல் முறையாக 3 தொகுதிகளிலும் வென்றது.