June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து- தமிழக அரசு உத்தரவு

1 min read

Tamil Nadu government orders to repeal the Goondas Act against YouTuber Savku Shankar

20/5/2026
பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் மீது கடந்த ஏப்ரல் 9-ம் தேதி சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. இது தொடர்பான உத்தரவை அப்போதைய பெருநகர சென்னை காவல் ஆணையர் பிறப்பித்திருந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், ‘சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் வைக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்த விவரங்கள், ஆலோசனை வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டன. இது குறித்து ஆய்வு செய்த ஆலோசனை வாரியம், சவுக்கு சங்கரை தடுப்புக் காவலில் வைப்பதற்கு போதுமான காரணம் இல்லை என்று அறிவித்தது.

அதன்படி, சவுக்கு சங்கருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவை அரசு ரத்து செய்கிறது. வேறு வழக்குகள் இல்லாவிட்டால் சவுக்கு சங்கர் உடனடியாக விடுதலை செய்யப்படுவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *