June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

51 ஆயிரம் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை- மோடி வழங்கினார்

1 min read

Modi issues appointment orders to 51,000 youth

23.5.2026
அரசுப் பணிகளில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 51,000-க்கும் அதிகமான இளைஞர்களுக்கு பிரதமர் மோடி நேற்று காலை 11 மணிக்கு நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம்இந்நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

வேலைவாய்பு உருவாக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பது என்ற பிரதமரின் உறுதியான நிலைப்பாட்டுக்கு ஏற்ப இதற்கு செயல்வடிவம் வழங்கும் வகையில் ஒரு முக்கிய நடவடிக்கையாக இந்த வேலைவாய்ப்பு முகாம் அமைந்துள்ளது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 18 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 12 லட்சம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற 19-வது வேலைவாய்ப்பு முகாம் நாடு முழுவதிலும் 47 இடங்களில் நடைபெற்றது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிதாக பணியில் சேரும் விண்ணப்பதாரர்கள் ரெயில்வே, சுகாதாரம், நிதிச் சேவைகள் துறை., உயர்கல்வி உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பணியமர்த்தப்பட உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *