கீழக்கடையம் முத்தாரம்மன் கோயில் கொடை விழா
1 min read
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 48;
Keezhakadaiyam Mutharaman Temple Donation Ceremony
26.5.2026
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள
கீழக்கடையம் முத்தாரம்மன் கோயில் கொடை விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் கீழக் கடையத்தில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாரம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு பேச்சியம்மன், சுடலைமாடன் உள்ளிட்ட கோயில்களும் அமைந்துள்ளது. இந்த பழமை வாய்ந்த கோயிலின் வரிதாரர்கள் பலர் வெளியூர்களில் வசித்து வந்தாலும் அனைவரும் இணைந்து ஆண்டும்தோறும் வைகாசி மாதத்தில் இந்த கோயில் கொடை விழாவை சிறப்பாக நடத்துவது வழக்கம்.
வழக்கம்போல் இந்த ஆண்டும் சிறப்பாக துவங்கிய கொடை விழாவில் இன்று செவ்வாய்கிழமை (26.05.2026) காலை பாபநாசம், இராமநதி மற்றும் திப்பணம்பட்டி கைக்கொண்டார் கோயில் ஆகிய கோயில்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீரால் பேச்சியம்மன், சுடலைமாடன் ஆகிய தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து இரவு வில்லுப்பாட்டு, சாமியாட்டம், குறித்து சொல்லுதல், கிடா வெட்டுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்படுகளை முத்தாரம்மன் கோயில் நிர்வாகிகள் முருகன், குமரேசன், ரமேஷ், சரவணன், செந்தில், சதீஷ் கந்தராஜா, செல்வம் உள்ளிட்ட முத்தாரம்மன் கோயில் வரிதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.