June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்குறித்த ஆய்வு கூட்டம்

1 min read


Study meeting on crimes against women and children in Tenkasi

26.5.2026
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன் (26.05.2026) சட்டம் மற்றும் ஒழுங்கு. சாலைப் பாதுகாப்பு, போதை ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள், கனிம வளம் மீதான கண்காணிப்பு குழு ஆகிய ஆய்வுக் கூட்டங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தலைமையில் நடைபெற்றது.

சாலைப் பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் சாலை விபத்துக்கள் தொடர்பான தரவுகள் குறித்தும், முந்தைய ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் தற்போதைய நிலைகள் குறித்தும், நடப்பு மாதத்தில் விவாதிக்கப்பட வேண்டிய தரகுகள் குறித்தும், சாலை விபத்து நடைபெற்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து, சட்டம் மற்றும் ஒழுங்கு, போதை ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள், கனிம வளம் மீதான கண்காணிப்பு குழு போன்ற ஆய்வுக்கூட்டங்கள் நடைபெற்றது.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கர், உதவி ஆணையர் (கலால்) ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (குற்றவியல்) ஹரிஹரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *