தெருவோர வியாபாரிகளுக்கு மத்திய அரசு ரூ.17,800 கோடி பிணையில்லா கடன்
1 min read
Central government provides Rs. 17,800 crore collateral-free loan to street vendors
1.6.2026
கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசால் 2020 ஜூன் 1ம் தேதி பிரதம மந்திரி ஸ்வநிதி திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த திட்டம் தொடங்கப்பட்டு நேற்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின்கீழ் கடந்த 6 ஆண்டுகளில் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.17,800 கோடிக்கும் அதிகமான பிணையில்லா கடன்கள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 75.5 லட்சம் தெருவோர வியாபாரிகளுக்கு 1.12 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 46 சதவீதம் பேர் பெண்கள் என்றும் 70 சதவீதம் பேர் விளிம்புநிலை சமூகங்களை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊக்கத்தொகை மற்றும் வட்டி மானியங்கள் மூலம் தெருவோர வியாபாரிகள் ரூ.800 கோடி அளவுக்கு பயன் பெற்றுள்ளனர். வியாபாரிகள் நலன் கருதி இந்த திட்டம் மார்ச் 2030 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.